சனி, 12 செப்டம்பர், 2015

தடாகம் கலை இலக்கிய வட்டம் --12--9--2015




 

 

காற்று வெளி மின்னிதழ் ( புரட்டாசி இதழ் 2015)



                     தாலி பாக்கியம்
‘’இதோ  பாருங்கம்மா  ,இவருக்கு ஹார்ட் மட்டும்தான் ஒட்டிகிட்டு இருக்கு ,இப்ப உடனடியா டயாலிஸ் செய்யணும் ,திருச்சிக்கு கொண்டு போங்க’’டாக்டர் பரஞ்சோதி சொன்னார் .
’என்ன  டாக்டர்  சொல்றீங்க ,உங்களை நம்பித்தானே  வந்தோம் ‘’மீனா கேட்டாள்
‘’  நீங்க பத்து நாளைக்கு மின்னாடியே கொண்டு வந்திருக்கணும் லேட்டா வந்திருக்கீங்க எல்லாமே அவுட் அதான் சொல்றேன் உடனடியா திருச்சி கொண்டு போங்க நான் டாக்டர் மைக்கேலுக்கு லெட்டர் தரேன் ‘’
இத்தனைக்கும் வேணி அழுத்தமாக இருந்ததை பார்த்து’’அக்கா  டாக்டர் சொன்னதை கேட்டியா ,இனிமேலும் இங்க இருந்து புண்ணியமில்லே  சீக்கிரம் கிளம்புவோமா?’’                                   ’’இல்லே  மீனா ,திருச்சிக்கெல்லாம் போகமூடியாது ,சென்னைக்கு கிளம்புவோம்’’
‘’னீங்க புரிஞ்சிதான் பேசுறீங்களா ?இந்த கண்டிஷனில் அவ்வளவு தூரம் எல்லாம் போகமுடியாது அப்படியே போனாலும் பாதி வழியிலேயே திரும்பித்தான் வரணும் சூழ் நிலையை புரிஞ்சுக்கோங்க’’  டாக்டர் உறுதியாகச் சொன்னார்.
சுற்றியிருந்த  உறவினர்களுக்கு புரிந்தாலும்
வேணி மட்டும் பிடிவாதமாக இருந்தாள் .
’’  டாக்டர் ,எனக்கு நீங்க சின்ன ஹெல்ப் பண்ணுங்க,உடனடியா ஒரு ஆம்புலனஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க  மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் ‘’
‘’என்னக்கா சொல்றே?வீணா,,அவரை எதற்கு அலைக்கழிக்கணும்?,’’மீனா கேட்டாள்
‘’எனக்கு  கடவுள் மீது நம்பிக்கை இருக்கு அதனால நான் இவரை சென்னைக்கு  கொண்டு போய் டிரீட் மெண்ட் கொடுத்தால் சரியாகிவிடுவார் .
வேணி சொன்னதுடன் அல்லாமல் கணவரை ஆம்புலன்ஸில் ஏற்றினாள்  சலைன் ஏற்றியபடியே பேச்சு மூச்சற்று ஏறக்குறைய பிணம் போல்தான் கிடந்தார் விசுவம்
‘’இந்த அம்மா என்ன லூஸா இத்தனை சொன்னபிறகும் சென்னைக்கு கிளம்பிட்டு எப்படி  இருந்தாலும் எட்டு மணி  நேரம் ஆகும் சென்னை போக அதுவரை எப்படி தாங்கும்?பிடிவாதமா  இருக்கே ‘’டாக்டர் பொறுக்கமுடியாமல் பக்கத்தில் இருந்தவரிடம் புலம்பினார்
இல்லெ டாக்டர் அந்தாம்மாவுக்கு கடவுள் பக்தி அதிகம் . என்கணவரை கடவுள் காப்பாத்துவார் என்று சொல்கிறார்கள்ஆன்மீக ஈடுபாடு அதிகம் .
விசுவம் மிகவும்  நேர்மையானவர்   எல்லாவிஷயத்திலுமே கண்டிப்பானவர் சாப்பாடு விஷயத்திலும் கரெக்டானா பேர்வழி
அப்படி இருந்தும் சுகர் வந்துவிட்டது,அதற்கான மாத்திரைகளைக்கூட ஒழுங்காக எடுத்துக்கொண்டிருந்தார் இருப்பினும் தீடிரென்று  சுகர் கன்னாபின்னாவென்று இறங்கி  பேச்சு மூச்சில்லாமல் போய் விட்டார் .
அவர் மனைவி பக்தியோகத்தில் திளைத்தவள் அவள் மனம் மட்டும் திடமாக நம்பியது கடவுள் தன் கணவரை காப்பாற்றுவார் என்று
சென்னை போனதும் பணத்தை கட்டி அப்பல்லோவில் அட்மிஷன் போட்டாள் .டாக்டர்கள்  ஐந்து பேர் கூடி செக் பண்ணினார்கள்,விசுவத்தின்  கண்டிஷன் மோசமாகத்தான் இருக்கிறது ஒன்றும் சொல்லமுடியாது என்று சொன்னார்கள்
ஆனாலும் வைத்தியத்தை தொடர்ந்தார்கள்
வேணி அங்கிருந்தா பிள்ளையாரிடம் தஞ்சம் ஆகிவிட்டாள் .அங்கே காசு இறைந்து கொண்டிருந்தது விசுவத்தின்   உடலில் எந்த மாற்றமும் இல்லை ,வந்து ஒரு வாரம் ஒடி விட்டது ‘’என்னக்கா  அத்தான் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லையே  தஞ்சை டாக்டர் சொன்னதுபோல்..’’ சொன்ன மீனாவை இடை மறித்தாள்வேணி
‘’எனக்கு நம்பிக்கை இருக்கு அவர் பிழைத்துக்கொள்வார் ,என் உள்ளுணர்வு சொல்கிறது அவர் எழுந்து விடுவார் ‘’
‘’ஏன்க்கா மருத்துவர்களை கடவுளாக சொல்வார்கள் அவர்களாலேயே ஒன்றும் சொல்ல முடியவில்லை நீ என்னடா வென்றால் உள்ளணர்வு சொல்கிறது என்கிறாய் கடவுள் காப்பார் என்கிறாய்’’
மீனா கிண்டலாக கேட்டாள்
கடவுளின் கையது தொடுவது உண்டெனின் நடவாதனைத்தும் நடக்கும் மீனா ,அன்று துச்சாதன் பாஞ்சாலியின் வஸ்திரத்தை உருவும்போது கண்ணன் வந்து காப்பாற்றவில்லையா? ஏன் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவானை காப்பாற்றவில்லையா/இதெல்லாம் எப்படி நடந்தது ? ஆன்மீக பலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும் .  நம் இதயத்தின் அடித்தளத்திலிருந்து கிளர்ந்தெழும் ஒரு உருக்கமான  பிரார்த்தனை  இறைவனை எட்டுவது திண்ணம் .
‘’அக்கா எனக்கு ஒன்றுபுரியவில்லை  கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லும் தஞ்சையிலேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே ஏன் சென்னைக்கு கொண்டுவந்தாய் சென்னயில்தான் கடவுள் உதவி செய்வாரா?’’
‘’முட்டாள் மாதிரி பேசாதேகடவுள் உதவுவார் என்று ஒருவன் படிக்காமலே  பரீட்சை எழுத முடியுமா? அங்கே சில வசதிகள் இருக்காது அப்பல்லோவில் எக்யூப் மெண்ட்ஸ் அதிகம்
கடவுள் உதவினாலும் நம் முயற்சியும் வேண்டும். பக்தி யோகத்தில் இருப்பவர்களுக்குத்தான் அது புரியும்’’
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வேணியின் மகன் ரவி ஓடிவந்தான்
என்ன ரவி ஓடி  வ்ரே என்னவாயிற்று/’’
’’அம்மா உங்க பிராத்தனைக்கு கடவுள் செவி சாய்த்திட்டார் அப்பா கண்விழித்திட்டார்
டாக்டர்கள் எல்லாம்  உங்கள் தாலி பாக்கியத்தாலேதான் அப்பா உயிர் பிழைத்ததாக பேசிக்கொள்கிறார்கள்’’
‘’தப்புப்பா   உண்மையான பக்திக்கு கடவுள் அடிமை ,,அவர் தன் பக்தையின் கூக்குரலுக்கு செவி சாய்த்திருக்கிறார்  அதுதான் உண்மை ‘
டாக்டர்களுக்கே சவாலாக இருந்தது விசுவத்தின் உயிர் அவர்களுக்கு இன்றுவரை வியப்பாகவும் இருக்கிறது விசுவம் உயிர் பிழைத்தது

‘’’’




புதன், 9 செப்டம்பர், 2015

ஹைகூ கவிதைகள் -வல்லமை --2-9-2015

என் ஹைகூ கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி
Home » இலக்கியம், கவிதைகள் » ஹைக்கூ
ஹைக்கூ
Wednesday, September 2, 2015, 2:34
இலக்கியம், கவிதைகள்


-சரஸ்வதி ராசேந்திரன்
மழை
வாடும் வேருக்கு
நீர் விடும்
இயற்கை!
அமாவாசை
நிலவு தொலைந்த
சோகத்தில் முகம்
இருண்டுகிடக்கிறது
வானம்!
முழு நிலவு
வான் குளத்தில்
மலர்ந்தது
வெண் தாமரை!
அலைகள்
கரைப்பார் கரைத்தால்
பாறையும்
கரையும்!
கறையான்
சேமித்த புத்தகங்களைச்
சில நொடிகளுக்குள் படித்துக்
கரைத்துக் குடித்தது!
விண்மீன்கள்
வானம் முழுதும்
மத்தாப்பு சிதறல்கள்

திங்கள், 7 செப்டம்பர், 2015

கோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015


கோகுலாஷ்டமி – கண்ணன் கவிதை

-சரஸ்வதி ராசேந்திரன்
ஏகாந்தச் சேவை   தாராய்!
காரிருள்      நடு நிசி     வேளையிலே
கண்ணன்      பிறந்தான்   கடுஞ்சிறையில்   BabyKrishna
மண்ணை      உண்டு     உலகைக் காட்டினான்
வெண்ணெய்     திருடித்   தின்பவனவன்
மாடுகள்     மேய்க்கும்    கண்ணன் அவன்
ஜாலம்   ஆடும் மாயக்   கண்ணன்
குருவாயூரில்   குழந்தையாய்    நின்று
திருமேனித்       தரிசனம்     தந்தான்
குழலூதி     மனம் குளிர     வைப்பான்
கோபியரின்     சேலைமறைத்துக்   குறும்புசெய்வான்
பகலிரவாய்      அவனை   நாம்      வணங்குவோம்
பரந்தாமன்      தாளினைச்   சரண் புகுவோம்
எத்தனையோ   லீலை      செய்தாய் 

வல்லமை புகைப்பட போட்டி---28



 உன் கடைக்கண் பார்வை தென்றலாய் என்னைத் தழுவுது; நீபோட்ட கண் விலங்கில் மாட்டித் தவிக்குது மனசு!’ என்று கவினோடு காதல் கவிதை தீட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.      



அலையும் மேகங்களுக்குள்ளே

நகரும் நிலவு போல
இலை மறை காயாக மறையும்
இளமையின் ரகசியம் காதல்
காதல் பூத்த வேளையில்
நாணம் தோன்றுவது அழகுதான்
இன்றைய பெண்ணுக்கு
இந்த நாணம் புதுமுறை
உன் கடைக்கண் பார்வை
தென்றலாகஎன்னை தழுவுது
மல்லிகை கொடியாய்
என் தோளை சுற்றுது
உன் கண்ணின் ஈரம் பட்டதும்
என் மனசெல்லாம துளிர் விட்டது
நீ போட்ட கண் விலங்கில்
மாட்டி தவிக்குது மனசு இதை
ஊட்டி வளர்ப்பாயா இல்லை போக்கு
காட்டி மறைவாயா?
புரியவில்லை

சரஸ்வதி ராசேந்திரன்

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தடாகம் ஆக்ஸ்டு மாத போட்டி

ஆகஸ்ட் மாதப்போட்டிக் கவிதை
-மனிதனாக பிறப்பது பிறப்பன்று
மனித நேயத்தோடு இருப்பதே நன்று
இலட்சியம் இல்லா வாழ்க்கை வீணே
இலக்கற்ற வாழ்வில் சிறப்பேதுமில்லை
உழைப்பே என்றும் உயர்வைத்தரும்
உழையாதவன் வாழ்வு தளர்வைத்தரும்
பலமும் வளர்ச்சியுமே வாழ்வின் அடையாளம்
பலவீனம் என்றும் இழப்புக்கு அடையாளம்
தோல்வி எனும் எதிரியுடன் தினம் போராடு
திறமைக்கு அதுதான் நமக்கு சவாலு
மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்
ஏற்றங்கள் ஏணியாக தானே அமையும்
தன்னை நம்பும் துணிவிருந்தால் என்றும்
விண்ணைத் தொடலாம் ஒரு நாளில்
முயற்சி பயிற்சி இரண்டுமிருந்தால்
முடியாதது இல்லை ஒத்துக்கொள்
நல்லது நடக்கும் என்று உறுதியுடன் உழை
நம்பிக்கைதான் உன்னை உயர்த்தும் நம்பு

சரஸ்வதி ராசேந்திரன்