என் ரோஜாப் பதியன்கள்
_______________________________
ரோஜா என்றாலே எனக்குப் பிடித்தம்தான்
நர்சரிக்குச் சென்று நாலு மணிநேரம் பேசி
வெள்ளை சிவப்பு மஞ்சள் ரோஸ்
வாங்கி வைத்து
நாள்தோறும் நீர் ஊற்றினேன்.
இடம் மாறிய சோகமோ
என்னவோ தெரியவில்லை
சோரந்தே கிடந்தன
சுகப்பட வில்லை
மரம்செடி கொடிக்கும்
உணர்வு உண்டு
என்று படித்ததினால்
தனிமை போக்க
என் உணர்வுகளை
அதனிடம் கொட்டியபடியே
நீர் ஊற்றுவேன்
ஒருநாள்
எதிர்பாராது இயற்கை
வெள்ளமாய் வழிய
செடிகள் சாய்ந்தன
விரக்திமன துக்கத்தில்
செடியையே கவனிக்கவில்லை
தொடர்ந்த துன்பத்தால்
துவண்டுபோனேன்
பிறந்தநாள் வந்தது
மனக்குறையோடு
குளித்து ரோஜா வாங்க
வெளியில் வந்தால்
உலகத்து ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்எனக்கேஎனக்காயிற்று
ஆம் கீழே சாய்ந்து கிடந்த செடிகளில்
நான்குவண்ணம்நளினமாய்
என்னை வரவேற்றது
எத்தனைகுடம் ஊற்றினாலும்
அசையாதது இயற்கையின்
வலிமையை எண்ணி வியந்தேன் மகிழ்ந்தேன்
சூடிக்களித்தேன்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக