இங்கே இருக்கிறேன்
இசைபட வாழநினைத்தேன்ஆனால்
தினமும் வசைகளைக்
கேட்டே வலுவிழக்கிறேன்
எல்லாவற்றையும்
எருமை மாட்டின் மேல்
மழைபொழிந்தார்
போல் பொறுத்துக்
கொள்கிறேன்
எல்லா நிலைகளிலும்
இதுபோன்ற
மனிதர்களை நான்
சந்தித்துஇருக்கிறேன்
பாவம் அவர்கள்
எப்போதுமே தங்கள்
உணர்ச்சி புண்படுத்தப்பட்டதை
போன்றநிலையில்
இருப்பதால்தான் மற்றவர்களை காயப்படுத்துகிறார்களோ
சதா எதிர்ப்புணர்ச்சியை
காட்டுகிறார்என்மீது
வாழ்வு தொலையாதிருக்க
பொறுத்தல் அவசியம்
முட்டைமீது நடப்பதுபோல
பழகவேண்டியுள்ளது
அவரிடம்
அவர் அனுதாபத்துக்குரியவர்
கண்டனத்துக்குரியவர்அல்லர்
உண்மையான கோபம் இல்லை
ஏதோ துன்பத்தில்
இருக்கிறார்கள்
இதையெல்லாம் எண்ணித்தான்
நான் இன்னும் இங்கே
இருக்கிறேன்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran
மனரீதியாக ஒரு பாத்திரத்தை தன்பாத்திரமாகப் பாவித்து கவிதை தந்திருக்கிறார் கவிஞர்!
கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார்!
மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக