திங்கள், 27 ஏப்ரல், 2015

vallamai ----ப்டக்கவிதை போட்டி-7

’ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் புறநானூற்றுப் புலவரின் பொன்வரிகளை அடியொற்றித் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன் வடித்துத் தந்திருக்கும் வைர வரிகள்…
தாய் உன்னை ஈன்றாலும்
தந்தை யான என்கடமை
தரமான கல்வி யையும்
உரமான மன தையும்
திடமான உடலையும் தந்து
….என் வாய் உன் தூய
நடத்தை யையும் கேட்டு
இறும்பூ தெய்தவும் விழையும்…
வல்லமை படக்கவிதை போட்டி -7ல் மேகலா ராமமூர்த்தியால் பாராட்டுப்பெற்ற வரிகள், நன்றி வல்லமை இதழ்

படக்கவிதை போட்டி-9ன் முடிவுகள்----வல்லமை

மனிதருக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தரும் உறுத்தலை உணர்த்தும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…
கிழிந்த சட்டையுடன்                             முதலில், என் உள்ளம்தொட்ட கவிதை வரிகளை உவப்போடு                                                                                                                                    உங்களுக்கு அறியத்                                                                                                                                                                   தருகிறேன்!
மழிக்காதமுடியுடன்                                                                          மேகலா இராமமூர்த்தி           
குப்பை அள்ளும்
சிறார்களையும்
[…]
சைக்கிள் கடையில்

வேலை பார்க்கும்
சிறார்களையும்
பார்க்கும்போது
காரில் பள்ளிப்
போகும் மகன்
நிழலாடி உறுத்தல்தருகிறது 
***** அஞ்சான்
அஞ்சவில்லை  நான்  என்றும்
    அடுத்தவரை அண்டவில்லை
கெஞ்சி   வாழ  மாட்டேன் என்றும்
     கெடுதல்   செய்ய மாட்டேன்
கிஞ்சிற்றும்பிறர்கை நோக்கேன்
       கிளர்ந்தெழுவேன் உயர்வேன்
பஞ்சமும்  இல்லை என் வாழ்வில்
          பார்தனில் உயர்ந்திவேன்
நெஞ்சம் நிறையும் நேர்மை உழைப்பில்
           நல்லவன் வாழ்வான் நம்பு
தஞ்சம் அளிப்பாள்  படைத்தவளே 
          தன்னம்பிக்கை  சிறுவன் நான்
சரஸ்வதிராசேந்திரன்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

கன்னி அவளைக்காணவில்லை --வல்லமை இதழ்----ஏப்ரல் 20-4- 2015


மாலைமறை கதிரவனில் நிறமெடுத்துப்
பல்லவர் சிற்பமென உருவெடுத்துப்
பைங்கிளியின் அலகினில் இதழெடுத்துப்
பேச்சினியிலே அமுதச்சுவை படைத்தாள்
கண்ணை யுறுத்தும் மலை முகடெனவே
மார்பின்வளம் கொழிக்கவே நின்றாள்
ஒடிந்திடும் புது நாணலிலே
வளைந்திடும் இடை படைத்தாள்
வந்தென்மார் பினில்முகம் புதைத்தாள்
எழுந்தவளைத் தழுவச் சென்றேன்
கன்னி அவளைக் காணவில்லை!
கன்னி அவளெங்கே சென்றாள்?
கனவினிலே நான்கண்ட கன்னியவளைக்
கருத்தினிலே கொண்டு எழுத்தில் வடித்திட்டேன்!
வல்லமை இதழ்---ஏப்ரல் 20

தினமலர் நாளிதழ்----25-2-2005

போலிகளை பாராட்டுவோம் 
இன்று கள்ளநோட்டு ,போலி ரெவின்யூ ஸ்டாம்பு ,போலி முத்திரைத்தாள் ,போலி டிரைவிங் லைசன்ஸ் 
போலி கல்வி ,/ஜாதி சான்றிதழ் ,போலி பாஸ்போர்ட் ,போலி ரேசன் கார்டு ,போலி தொலைபேசி இணைப்பகம் 
போலி அதிகாரி ,போலி குற்றவாளிகள் என போலித்தனங்கள் அதிகரித்துவிட்டன
இந்த போலி பிடிபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர் இது நியாயமா ?இவர்கள் ஏன் இந்த போளித்தனகளில் ஈடுபடுகின்றனர் என்பதை குண்டக்க மண்டக்காவாக 
யோசித்துப்பார்த்தால் ,இவர்களை தண்டிப்பதை விட பாராட்டியே ஆகவேண்டும் என்ற ஞானோதயம்
ஏற்படும் எல்லோருக்கும் . வறுமையை ஒழிக்க முடியவில்லை ,எல்லோரிடமும் பணம்
ஏராளமாக இருந்தால் எல்லோரும் பணக்காரராகிவிடுவார்கள் என்ற நல்லெண்ணத்தில்
கள்ளநோட்டு அடிக்கின்றனர் .ரெவின்யூ ஸ்டாம்பு முத்திரைத்தாள் தட்டுப்பட்டால் மக்கள்
படும் அவஸ்தையை நீக்கும் நல்லெண்ணத்தில் ,போலியாக அவற்றை தயாரித்து தாராளமாக அளிக்கின்றனர் ,கல்வி/ஜாதி சான்றிதழ் ,ரேஷன் கார்டு ,டிரைவிங் லைசன்ஸ் .,தொலைபேசி இணைப்பு வாங்குவதற்குள் மக்கள் திக்குமுக்காடி அரை பைத்தியமாக மாறிவிடும் திணறலை நீக்குவோமே என்ற நல்லெண்ணத்தில் போலியாக அவற்றை தயாரித்ஹு சுலபமாக வாங்க வழி செய்கின்றனர் .அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை அல்லது புகார் அளி க்கவோ ,கையெழுத்து வாங்கவோ மாதக்கணக்கில் காத்துக்கிடக்கவேண்டியிருக்கிறதே ,இந்த த்தாமதத்தையும் ,வேதனையையும் நீக்க உதவுவோமே என்ற நல்லெண்ணத்தில் போலி அதிகாரியாக மாறிவிடுகின்றனர் உண்மைக்குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்குள் பல தலை முறை கடந்து விடுகின்றது
போலீஸ் திறமையின் மீது நம்பிக்கைஇழந்தால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து சமூக பதட்டம் வரும் அந்த சூழ் நிலையை தடுப்போமே என்ற நல்லெண்ணத்தில் போலி குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர் .ஏழைகள் முன்னேறவும் தட்டுப்பாடுகளை நீக்கவும் துணை செய்யாத அரசை தண்டிக்கிறோமா ?சான்றிதழ்களை சுலபமாகப்பெற துணை செய்யாத நிவாகத்தை தண்டிக்கிறோமா? சரியாக செய்யல படாத அரசையும் ,அதிகாரிகளையும் கண்டுகொள்ளாமல் தண்டிக்காமல் விடுவது நியாயம்
என்றால் அரசும் அதிகாரிகளும் செய்யத்தவறிய வேலையை(போலித்தனமாகவாவது)
செய்யும் போலிகளை பாராட்டி கவுரவிப்பதுதானே நியாயம் .
தினமலர் ---25-2-2005

பலபத்திரிக்கைகளில் வந்த எனது ஜோக்குகள்

சாராய பொம்மன் 

எதற்கு கேட்கிறாய் மாமூல் ? யாரை கேட்கிறாய் மாமூல் ?
அடுப்பு எரிகிறது ,சாராயம் வடிகிறது ,உனக்கேன் கொடுக்க
வேண்டும் மாமூல் ?
எங்களுடன் ஊறல் போடவந்தாயா ?.காயிச்சி வடித்தாயா?
வாங்கி குடித்தாயா?இல்லை விற்கத்தான் வந்தாயா? ஓசியில்
குடிப்பவனே உனக்கேன் கொடுக்க வேண்டும் மாமூல் ?
நீ என்ன மாமனா ?மச்சானா ?
( மொபைல்போலிசை ,குடி போதையில் சாராய வியாபாரி
ஒருவன் பேசினால் எப்படி இருக்கும் ஒரு கற்பனை )  குமுதம்
'' அவர் போலி டாக்டருன்னு எப்படி சொல்றே ?''
''அடிக்கடி நியாபக மறதிஏற்படுதுன்னு சொன்னதுக்கு
மெமரி கார்டு யூஸ் பண்ணுங்கன்னுசொல்றாரே "
கல்கி ----
""குடியிருக்கிற ஓனர்வீட்டிலேயே திருடீருக்கியே
எ என்ன தைரியம் உனக்கு ?''
''வீட்டை காலி பண்ணு காலி பண்ணுன்னு அவர்தான்
எஜமான் ஒரு மாசமா சொல்லிகிட்டே இருந்தாரு "
மல்லிகை மகள் ---
''ஹார்டுவேர் ,சாப்டுவேர் படிப்பெல்லாம் முடிச்சுட்டு
அமெரிக்காபோனியே என்ன செய்யிறே?''
''சர்வரா இருக்கேன் "
அவள் விகடன் ----
''நம்ம கோபால் மூணாவது தடவையா வந்த ஹார்ட்
அட்டாக்கில் இறந்து விட்டானாமே ?''
''அவன் ஒரே அட்டம்டில் எதையுமே பாஸ் பண்ணியது
கிடையாதே "
குங்குமம் --------
''நம்ம கூட படித்த தாயுமானவன் இப்ப என்ன ஆனான் ?''
''தந்தையும் ஆனான் "
குமுதம் -------
''பத்திரிகை ஆசிரியர் உங்களை ஏன் வேலையே விட்டே
விரட்டி விட்டார் ?''
""ஆசிரயர் படத்தை போட்டு பதிலளிக்கிறார் என்று
போடுவற்கு பதில் பல்லிளிக்கிறார் என்று போட்டுவிட்டேன் ''
இதயம் பேசுகிறது ----
''ஏங்க,நான் நல்லா சமைப்பேன் ,நல்லா பாடுவேன்னு
உங்க நண்பர் கிட்ட பொய் சொன்னீங்க "?
'' உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ஏதாவது
சமாதானம் சொல்லணுமே ,அதுக்காகத்தான் ''
பெண்கள் மலர் ----
''உனக்கு அடிக்கடி மயக்கம் வருதுன்னு சொன்னியே
பி .பி யா , பேபியா "
ஆனந்தவிகடன் ----
''டாக்டர் நீங்க ஏன் டாக்டர் தொழிலை விட்டுட்டு
ஜோக் எழுத வந்தீங்க ?''
''அங்கே அறுத்தா அழுவுறான் ,இங்கே அறுத்தா
சிரிக்கிறான் அதான் ''
ஆனந்தவிகடன் ----
''அவன் சம்பளத்திலே எப்படி சுவேகா வாங்கினான் ?''
''எல்லாம் ஆபீசிலே சுவாகா பண்ணித்தான் ''
ஆனந்தவிகடன் -------
''அந்த நடிகை படப்பிடிப்பை கனடாவில் தான் வைக்கணும்ன்னு
பிடிவாதம் பிடிக்கிராங்களே ஏன் ''
''அந்த நாடுதான் இன்னும் அவங்க பார்க்கலையாம் ''
கல்கி -----
'
'

எனது நகைச்சுவை த்தோரணங்கள்

’’எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கடனா கொடு,ஒரு வாரத்திலே திருப்பி
கொடுத்துடறேன்’’
‘’என் கையிலே காலணா கூட கிடையாதே’’
‘’அப்ப பாங்கு அக்கவுண்ட்டை சொல்லு ‘’
‘’பாங்கு அக்கவுண்ட்டா , FB அக்கவுண்ட் தான் இருக்குஅதிலே காசு எடுக்கமுடியாதே’’
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அண்ணாச்சி உடம்புக்கு என்ன ?ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்களே ஏன்?’’
‘’என் மனைவிக்கு மாமியா பிரச்சனை,எனக்கு சேமியா பிரச்சனை’’
‘’ ஒண்ணும் விளங்களையே ‘’
‘’ என் அம்மாகிட்டே சண்டை போட்டுட்டு தனி குடித்தனம் வந்தாச்சு
என் மனைவிக்கு சேமியாவைத் தவிர வேறொண்ணும் செய்யத்தெரியாதே’’---------------------------------------------------------------------------------‘                                                                                      ’அம்மா இலவசமா ஏன் ஆடு மாடு கொடுத்தாங்க தெரியுமா?’’
‘’எதுக்கு?’
‘’அது இரண்டும்தான் கடைசி வரை கட்சி மாறாம அம்மான்னே சொல்லிகிட்டு இருக்காம் ‘----------------------------------------------------------------------------------------------------------------------------------


சாதாரண ஹோட்டலுக்கும்,,ஸ்டார் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்?
‘’சாதாரண ஹோட்டலில் நாமதான் டிரஸ் போட்டிருப்போம்
ஸ்டார் ஹோட்டலில் மேஜை நாற்காலியெல்லாம் பாவாடை கட்டியிருக்கும்’’

குறுங்கவிதை

ரகசியம் காத்து
பத்து மாதம் சுமந்து
பெற்ற புதையலை
குப்பையில் எறிந்தாள்
தப்பான குழந்தையென
தப்பு செய்த தாய் !!

மங்கை -----------மார்ச் 1985

                                                 கடத்தல் காரர்கள்
கன்னிப்பெண்ணே
கவனம் தேவை
இது கவிஞர்கள்
உலவும் நாடு !
உன்னைப்பூ வென்று
சாதித்தாலும்
பொன் கேட்க த்
தயங்க மாட்டார்கள் !
கட்டிக் கரும்பு கனி என்றாலும்
கார்கேட்க மறப்பதில்லை !
உன் விழியை
மீனாக்குவார்
இதழை தேனாக்குவார் ....
இப்படி இவர்கள்
உவமை கூறியே
உயர்ந்து விட்டார்கள் !
மயக்குமொழிகளால்
மனதை கெடுக்கும்
மாயக்காரர்கள் ...
கவிதை கூறியே
காதலிக்கும் கடத்தல்காரர்கள் !
இவர்கள் வலையில்
வீழாதே!
உன் காதை செவிடாக்கி
உன் கண்களைகாவலாக்கி
இதயத்திற்குத் தாள் போடு
உள்ளத்தில் ரோஜாவானாலும்
வெளியில் முள்ளாகவே இரு
அப்பொழுதுதான் உன்
பெண்மை காக்கப்படும் !
இந்த என் கவிதை மார்ச் 85 மங்கை இதழில் வந்தது

சிறுவர்பாடல் 2-

உழைப்பே என்றும் உயர்வு 
உழைப்பே என்றும் உயர்வு ------தினம் 
உழைக்காதவன் வாழ்க்கை தளர்வு 
தேய்வதும் வளர்வதும் நிலவுக்கழகு -----வாழ்க்கையில் 
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு 
களைப்பும் சோம்பலும் நெருங்காமல் ------தினம்
கடமை ஆற்றினால் உயர்வுண்டு
ஓங்கி அடித்தால் மலையும் உடையும் -----அந்த
உறுதி கொண்டால் தடையும் விலகும்
அனைத்திலும் வரும்தான் தோல்வி ----தொடர்ந்தால்
அத்தனையையும் வெல்லும் முயற்சியின் வலிமை
தளர்ச்சி போக்கி முயற்சி செய்தால் -----பெரும்
வளர்ச்சி உன்னைத் தேடிவருமே
தொடர்க வெல்க புகழ் பெறவே


------------------------------------------------------------------
  சொல்லி மாயுமோ ?
நிலவு வருது நிலவு வருது 
நீல வானில் மிதந்து வருது 
உலவும் அதன் முகத்திலே 
கலையாய் இருக்கு ஒரு மச்சம் 
பார்ப்போர் கண்கள் பரவசத்தில்
பரவும் சோதி முகத்தினிலே
தன்னிகரில்லா தண்ணிலவு
தன்னலம் இல்லா தகையழகு
ஊருக்கெல்லாம்ஒளி கொடுக்கும்
உயர்ந்த திருவுளம் கொண்டதது
அம்புலி நீயோ இருக்குமிடம்
அறியோம் எங்கும் சுற்றிடுவாய்
குடிசைக்கிடையே பாய்ந்தொளியை
கூட்டி ஏழையை மகிழ்த்திடுவாய்
அம்மா நாடுவாள் உன் தயவை
அழும் குழந்தைக்கு சோறுட்ட
கவிஞர்ரசிப்பார் உன்னழகை
கருத்துடன் கவிதை தேரோட்ட
அல்லியும் மலர்ந்திடும் உனைக்கண்டு
சொல்லிமாயுமோ உன் பெருமை

சிறுவர் மணி----8-9-2007

வாழ்வோம் உணர்ந்து
அன்பாய் இருக்கத்தெரிஞ்சுக்கணும்
ஆங்காரப்போக்கைத் தவிர்த்துக்கணும்
இனிமையா பேசக் கத்துக்கணும்
ஈகை செய்ய பழகிக்கணும்
உண்மையா நடக்க முயர்ச்சிக்கணும்
ஊர்நலம் பேணி உயர்ந்துக்கணும்
எதையும் தெளிவுற கத்துக்கணும்
ஏற்றம் வந்தால் அடங்கிக்கணும்
ஐயம் வந்தால் கேட்டு தெரிஞ்சுக்கணும்
ஒற்றுமையாய் வாழ கத்துக்கணும்
ஒதிநலம் வாழ்வோம் இதை உணர்ந்து
வாழ்வில் உயரலாம் அகமகிழ்ந்து
தினமணி --சிறுவர் மணி 8-9-2007

கோகுலம்----2010

கடற்கரை அழகுதான் 
கடற்கரை போகலாம் 
காலாற நடக்கலாம் 
கரும்பலகை அழித்திட 
கடல்நுரை பொறுக்கலாம் 
பலூன் வாங்கி வெடிக்கலாம்
பட்டாணி வாங்கி சுவைக்கலாம்
கரையில் வீடு கட்டினால்
கரைத்துவிடும் அலைகளை
விரட்டியடிக்க ஓடினால்
துரத்தியடிக்கும் நம்மையே
மதுரை வீரன் போலவே
குதிரை சவாரி செய்யலாம்
துள்ளிவரும் அலைகளே
கொள்ளைகொள்ளும் மனத்தையே
வெள்ளிமீன் அலைகளை
அள்ளிப்பருக நீயும் வா
பள்ளிக்கூட விடுமுறையில்
கடற்கரை அழகுதான்
கவலைகள் மறக்கும்தான்
கோகுலம் ---மே 2010

சிறுவகள் பாடல்கள் (பத்திரிக்கைகளில் வந்தவை

போவோம் தம்பி பூந்தோட்டம்
போவோம் தம்பி பூந்தோட்டம்
பொங்குதே மனதில் கொண்டாட்டம்
எத்தனை ,எத்தனை மரங்கள்
அத்தனையும் இயற்கை வரங்கள்
வண்ண வண்ணமாய் பட்டாம்பூச்சி
எண்ணம் போலவே சுற்றும் காட்சி
வித விதமாய் விரியும் பூக்கள்
விசிரியாய் மாறி ஆடும் செடிகள்
வானினை மேகம் சூழும்
வளர்நிலா ஒளியாய் ஆளும்
காணும் இன்பம் கோடிதான்
நாமும் ரசிப்போம் ஆடிபாடிதான்
எண்ணம் என்றும் இனிதானால்
வண்ணமாகிடும் வாழ்க்கைதான்
போவோம் தம்பி பூந்தோட்டம்
பொங்குதே மனசில் கொண்டாட்டம்
பூந்தளிர் 20090
மரம்
தன்னை
வெட்ட வருபவனுக்கும்
நிழல் கொடுக்கும்
பகை இல்லாத
உள்ளத்தை க்
கற்பித்தது
மரம்
தினமலர் ---பெண்கள் மலர் 17---11--- 2009
---------------------------பிரியாவிடை
ஒவ்வொருமுறையும்
ஊருக்குப்போகும்போதெல்லாம்
சிறிது தூரம் கூடவே வந்து
பிரியாவிடை கொடுக்கின்றன
மரங்கள்
உறவினர்களைப்போல் |
தினமலர் -வாரமலர் --9-6-2013
-----------------------------------

பத்திரிக்கைகளில் வந்த என் கவிதைகள்ஞாபகம் வருதேஞாபகம் வருதே 
சீரியல் பார்த்து
சீரியஸாய்
விமர்சனம் கிறுக்கி
வார்த்தைகளை
கோர்த்து
வடிவமைத்து ,
பத்திரிக்கைக்கு
புதுக்கவிதை எழுதி
டிவியில் வரும்
குறுக்கும் நெடுக்கும்
கட்டத்திற்கான
விடையை
பழையப்
பத்திரிக்கையை
புரட்டிப்பார்த்து
தபால்பெட்டியில்
போடும்போதெல்லாம்
மறக்காமல்
ஞாபகம் வருகிறது
நலம் கேட்டு வீட்டிற்கு
நாலுவரி
நாளைக்காவது ஒரு
கார்டு எழத
வேண்டுமென்று
தினமலர் -பெண்கள்மலர் 2007
---------------------------------------------


தெரிந்தது
யூரின் டெஸ்ட்
பிளட் டெஸ்ட்
ஈ .சி .ஜி
எக்ஸ்ரே
ஸ்கேன்
ஆயிரக்கணக்கில்
செலவழித்தபிறகுதான்
கண்டு பிடித்தார்
மருத்துவர்
என் உடம்பில்
ஒன்றுமில்லை என்று
அவருக்குத்தெரியாது
உண்மையில்
என்கையிலும்
பணமில்லை இனி என்று
அமுதசுரபி ----பிப்ரவரி --2004


புதன், 15 ஏப்ரல், 2015

இன்றைய உலகம்

இன்றைய உலகு
 அவசரமானது
சாவி கொடுத்த
இயந்திரங்களாய்
மக்கள்
கணவன் மனைவி
இருவருமே
இறக்கை கட்டி
பறக்கிறார்கள்
அலுவலகத்துக்கு '
கூட்டு குடும்பம்
குலைந்து போனதால்
குழந்தை பிறக்கவே
திட்டம் தீட்ட வேண்டிய
பின்னணி
குழந்தையே
பாரமாக இருக்கும்
பரிதாபம்
பள்ளியிலிருந்து
வரும் குழந்தை
தானே பாலையும்
பிரட்டையும்
எடுத்து சாப்பிடும்
கொடுமை
விளையாட இடமில்லாததால்
தொலைக்காட்சியோடும்
கணினியோடும்
ஐக்கியம் ஆகிவிடும்
அவலம்
அன்றைய காலத்தில்
இருந்த
உற்சாகமும்
இன்பமும்
இன்றைய
குழந்தை வளர்ப்பிலும்
குடும்ப வாழ்க்கையிலும்
கிடைக்கவில்லை என்பதுதான்
உண்மை\
இந்த சிறுவர் பாடல் ’’குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை’’என்ற நூலில் இடம் பெற்றுள்ளது 172 பக்கங்கள் கொண்ட நூலில் என்னையும் சேர்த்து 166 கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர், அழ,வள்ளியப்பா பிறந்த நாளான 7-11-2013 அன்று மாலை காரைக்குடி சிங்கர் மகாலில் வெளிடப்பட்டது இந்நூல் . தொகுதி -1 இந்த நூலை சென்னை மணிவாசகர் பதிப்பகம் அழகு மிளிர வெளியிட்டுள்ளது. நன்றி
Saraswathi Rajendran's photo.

வல்லமை--படக்கவிதை போட்டி -4

                   என்னை    என் உணர்வுகளை
                   உண்ரமாட்டாய்யா  ?
                 உன்  கண்களால்  கருணை காட்டி
                அருள் மழை பொழிய மாட்டாயா  ?
                என் பக்கமிருந்து அருகமர்ந்து
                 ஆசையுடன் பேசமாட்டாயா  ?
                 என்று எத்தனையோ நாள்
                ஏங் கியிருப்பாய் 
               அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
              அகவை அறுபதில்தான்   எனக்கு 
              நேரம் கிடைத்திருக்கிறது   
               பூத்தூவி கேக் ஊட்டி   பிள்ளகள்
              பேரப்பிள்ளைகள்  சூழ 
               நெடு நாள்  ஆசையை நிறைவேற்றி
               என் நினைவலைகளையும் மீட்டிக்கொள்கிறேன்
               நம் மக்களுக்கு வழிகாட்டியாய் 
             இல்லறத்தை  நல்லறமாக்கிய உன்
             வரலாறை சொல்லி சொல்லி வடிவமைப்போம்  வா
  சரஸ்வதி ராசேந்திரன்

திங்கள், 13 ஏப்ரல், 2015

படப்போட்டி --6 வல்லமை இதழ் ---ஏப்ரல் 1

saraswathirajendran wrote on 1 April, 2015, 20:35
              சொத்துப்பத்தும் ஏதுமில்லே
            சொந்தபந்தம்   யாருமில்லே
             வானம்       பொய்த்ததால்
             வயல் வேலை  கிடைக்கலே
             வீட்டு வேலை   முடிஞ்சதும்
             கட்டியிருக்கும்   மாட்டை
             ஓட்டிப்போ மேய்ச்சலுக்குன்னு
             முதலாளி  ஆணையிட 
              தொழிலாளி யான நானு
             ஒத்தையடி      பாதையிலே
             ஒத்தை மாட்டை  ஓட்டிகிட்டு
             ஊருகடைசியிலே புல்லுத்தேடி
              பாருக்குட்டி    நான் நடந்தேன்
              யாருமில்லா   ஏழைஎனக்கு
               சாரமில்லா   வாழ்வதிலும்
                சோறுபோடும் முதலாளியும்
                இந்த பசுவும்தான்  தெய்வம்

சரஸ்வதி ராசேந்திரன்
               

கல்கி 21-6=2009


திருவாரூர் - நாகை மாவட்ட ஸ்பெஷல் -- கல்கி 21-6= 2009மன்மத ஆண்டே வருக ! வல்லமை இதழ்-- 13-4-2015

மன்மத ஆண்டே வருக!

-சரஸ்வதி ராசேந்திரன்
மன்மத ஆண்டே வருக!
மண்குளிர  மழை தருக!
பைந்தமிழ்ச் சித்திரை வருக!
பொய்கைவளர் பூ விரிய!
வசந்தகால வரவே வருக!
இசைந்து நல்வளம்  தருக!
சித்திரைப் பெண்ணே  வருக!
சிறப்பை நல்கி அருள் தருக!
வேப்பம்பூக் கொத்தாய்க் குலுங்க
மாமரம் பூத்துச் சிரிக்க
இளவேனிற் காலமே வருக!
இன்பங்கள் கொண்டு வருக!
லஞ்ச லாவணயம் ஒழிந்து
பஞ்சம் பசி நீங்கிப்
பொய்மைகள்  தகர்ந்துபோய்ப்
பூக்கட்டும் புதிய வருடம்!
பொங்கிச் செழிக்கட்டும் பூமி!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

வல்லமை படப்போட்டி -7ல் பாராட்டுப்பெற்ற கவிதை 12-4-2015

       தாய்  உன்னை   ஈன்றாலும்
           தந்தை  யான    என்கடமை
           தரமான  கல்வி   யையும்
           உரமான  மன    தையும்
           திடமான உடலையும் தந்து 
           நற்   போதனை   செய்து
           எப்போதும் என் காதுகள்
           உன்   கீர்த்தி   யையும்
           என்   வாய் உன்  தூய
           நடத்தை  யையும் கேட்டு
           இறும்பூ தெதவும்விழையும்
           தந்தை  தோள்   மீதேறி
           கடவுளை  வணங்கினால்
          வாழ்க்கையில் உயர்வார்களாம்
           வேலேந்திய    கையனாய்
           விரைந்து   மயிலேறி வந்து
           இவன்    தந்தை என்ன தவம்
           செய்   தானோ ?   என்று 
            மற்றவர்  புகழ்ந்திட வேண்டி
            பழனி முருகனை வேண்டுகிறோம்
சரஸ்வதி ராசேந்திரன           

சனி, 11 ஏப்ரல், 2015

கவிதைகள்----2013

நீ போதும் ---
எந்த கணக்கையும் 
எளி தாக போடுகிறாய் 
பாரன்ஹீட்டை 
செல்சியசில் 
மைல் களை
கிலோ மீட்டரில்
மாற்றி கொடுக்கிறாய்
எந்த நாட்டின்
கரன்சியையும்
இன்னொரு நாட்டின்
கரன்சி மதிப்பில்
சொல்லித்தருகிறாய்
எந்த ஊரின்
சீதோஷன நிலையையும்
டக்கென்று சொல்கிறாய்
பார்சல்களின் பயண நிலையை கூட
இருந்த இடத்திலிருந்தே
தெரிந்து சொல்கிறாய்
சொல்லின் பொருளைக்கூட
சொல்கிறாய் என்றால்
அதன் உச்சரிப்பைகூட
அழகாக சொல்லித்தருகிறாய்
பிள்ளைவெளி நாட்டிற்கு
தனியாக போனால் கூட
அந்த நாட்டிற்கு எப்போது
புறப்பட்டு,எங்கெல்லாம் பறந்து
எப்போது போய் அந்த
நாட்டிற்கு எப்போது போய்
சேருவான் என்று கூட
சரியாக சொல்கிறாய்
இத்தனையையும் சொல்லித்தரும்
இணையமே உனக்கு நிகரில்லை
ஆகவே எனக்கு நீ போதும்

புதன், 1 ஏப்ரல், 2015

குமுதம் ==வனஜா கிரிஜா=7=8-1997
வனஜா கிரிஜா
தூரத்திலேயே கிரிஜா வருவதை பார்த்து விட்ட வனஜா நின்றாள் . ஆனால் கிரிஜா வனஜாவை பார்த்ததும் விடு விடுவென கண்டு கொள்ளாமலேயே வந்த வழியே திரும்பிவிட்டாள் . வனஜாவுக்கு
இது அதிர்ச்சியாக இருந்தது .ஏனிப்படி ?நன்றி கேட்ட ஜென்மம் விடக்கூடாது .அவள் வீட்டிற்கே போய்ப்பார்க்கவேண்டும் ,கேட்க வேண்டும் புறப்பட்டாள் .
சப்தமின்றி மாருதி காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைய முற்படுகையில் பேச்சுக்குரல் கேட்டு நின்றாள் . "அடிப்பாவி ,கடைக்குப்போன நீ வனஜாவை பார்த்துட்டு ....நின்று ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டியா ?சுத்த நன்றி கெட்டஜென்மம்டி நீ "
"அம்மா ,நீ நினைக்கிற மாதிரி நான் நன்றி கெட்ட ஜென்மமல்ல .கஷ்டகாலத்தில் அவள் செய்த உதவியை நான் மறக்கலை . . ஆனால் என் கணவரின் அடாவடித்தனத்தாலே நான் மறுபடி ஏழ்மை
நிலை அடைந்து விட்டதை கேள்விபட்டா வனஜா துடிச்சு போய்விடுவாள் .மறுபடி பண உதவி செய்ய முன் வருவாள் .என்னாலே அவள் குடும்பத்தில் குழப்பம் வரக்கூடாதுன்னுதான் ,அவளை
அவளை அலட்சியம் செய்தது மாதிரி நடித்தேன் .இதற்காக என் மனதை எவ்வளவு தூரம் திடப்படுத்திக்கொள்ள எத்தனை கஷ்டப்பட்டேன் என்பது உனக்கு புரியாது ''
இதை கேட்ட வனஜா தன் அவசர புத்திக்காக வெட்கப்பட்டாள் .
குமுதம் 7-8 -1997