மலயமான் திருமுடிக்காரி
மலைநாட்டை ஆண்ட மன்னன் காரி
தலைமை ஏற்கும் தனிப்பெரும் ஆற்றலுள்ளவன்
அலைபாயா நெஞ்சம் உடைய ஆண்மையுள்ளவன்
கடையேழு வள்ளலில் ஒருவன் காரி
படையில் வேழமாய்ப் போரிடும் பலசாலி
கொடையில் சிறந்த கொள்கையில் நின்றவன்
நடைமுறையில் உள்ள நடுநிலைப் பண்பை
கடைபிடித்து வாழ்தலே கடமையாய்க் கொண்டவன்
பஞ்சக்கல்யாணி புரவியில் பவனி வந்து
வெஞ்சமரில் வெற்றி வாகை சூடுவான்
பாரில்பெற்ற பெரும் வளங்களை எல்லாம்
மாரியைப்போல வாரி வழங்கினான் மக்களுக்கு
காரிமன்னன் கபிலரிடை கனிந்தவொரு நட்பால்
பாரிமகளிர் இருவருக்கும் அடைக்கலம் அளித்தவன்
கபிலரும் பாணரும் கல்லாடனாரும் கீர்த்தனும்
காதுகுளிரவும் கண்கள் ஒளிரவும் பாடிப்புகழ்ந்தனர்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக