வெள்ளி, 10 மார்ச், 2023

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.
குறள்..1112
சோலையில் வெண்மலர் சொகுசாய் சிரித்தாட
நீல வானமாய் நீலோற்பவ மலராய்
காலை மாலை களிப்பினை சிந்தி
ஆலைக் கரும்பாய் ஆக்கிச் சென்றாள்
கயல் விழியும் கருங் கூந்தலும்
கிளி மூக்கும் மாதுளை இதழும்
அன்ன நடையும் சின்ன இடையுமாய்
அழகுடன் நின்ற அவளுடன் கலந்தேன்
மலர்காணின் மையாத்தி யுறும் நெஞ்சே
உலகம் எங்கும் அழகு மலர்களிருந்தாலும்
மெல்லியாள் விழியொக்க மலராதே குவளைகளே
மலர்ந்த என்னவளுக்கு ஈடாகு வீரோ
நான் ஒருவனே பார்க்கும் என்னவள்
கண் மனமே பலர் பார்க்கும்
மலரை ஒக்குமென மயங்குவது பேதமையே
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 3 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக