வெள்ளி, 10 மார்ச், 2023

நசையார் இசையும் இனிய செவிக்கு

 நசையார் இசையும் இனிய செவிக்கு

கண்ணால் கவர்ந்து
காதல் வளர்த்து
மன்றம் ஏறி
மகிழ்வுடன் கைகோர்த்து
இரவெது பகலெது
எதுவென அறியாமல்
இன்பம் துய்த்துக்கிடந்த
இனிய தருணத்தில்
பகை. முடிக்க
போர்க்களம் புகுந்திட
முகை வெடிக்கா
மொட்டாய் அதிர்ந்தாள்
நகை மறந்து
நலிந்தாள் என்றாலும்
தொகையாய் வெற்றிச்
செய்திக் கேட்டு
வகையாய் இன்பம்
தோன்றத்தான் செய்தது
என்னைப் பிரிந்தவன்
என்னை மறந்தானோ
மன்னவன் நினைவால்
மங்கை படும்பாடு
மெளனத்தில் கண்ணீர் சிந்தி
கைவளை சோர்ந்து
மெய்யும் உருகும்
இம்முறை மாறுவது
எக்காலம் தோழி
கணமும் பிரியா
காதலன் இன்று
கண்ணில் படவில்லையே
என்பது நேற்றுவரை
கூடியிருந்த நிலைதரும்இப்
புலம்பல்
நெடுநாளன்றோ இன்று என்பது இனியும் என்றாகுதல் நன்று.
Kesavadhs
.
Saraswathi Rajendran
மன்னவன் நினைவால் மைவிழி சோர்ந்து மௌனத்தில் ஆழ்ந்து மருண்டிடும் நிலையில் சிந்தையை நிறைக்குமவனது செய்திகள் தாமே ஆறுதல் தோழி தலைவியின் கூற்றழகு...
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக