எனது முற்றமும் எனது மரமும்
கண்விழித்ததுமே
நாசியைத் தாக்கும்
முற்றத்தில் நான்
முற்றத்தில் இறைந்து
கிடக்கும் பூக்களைப்
பொறுக்கி மாலைகட்டி
கண்ணன் படத்துக்குப்
போடுவதில்ஆரம்பிக்கும்
காலைப் பொழுது
வீட்டைச் சுற்றி பூமரங்களும்
காய்கறிகளுமாய் பசுமையுடன்
பார்ப்பவர் உள்ளத்தைக்
பரவசப்படுத்தும்
நாற்பது வருடம்
உயிரோடும் உணர்வோடும்
ஒன்றிய வீடும் முற்றமும்
கணவர் போனதும்
பிள்ளைகளின் அழைப்புக்கு
இணங்கிட உணர்வுக்கும்
வீட்டுக்கும் பூட்டு
வீட்டிற்கும் மரம்செடிகளுக்கும்
உணர்வுஉண்டாமே
என்னைப் பார்க்காத ஏக்கமோ
நீருக்குத் தவித்து பவளமல்லி
காய்ந்து உயிரைவிட்டிருந்தது
பராமரிப்பின்றி நோஞ்சான்
குழந்தைபோன்று சூம்பிக்கடந்தது
தென்னைமரம்
தனித்த நானும்
அவரில்லாமல்
தளர்ந்துதான் நிற்கிறேன்
என் முற்றமும் மரமும்
இல்லாமல்
எண்ணூறடி பிளாட்டில்
எதுவுமே செய்யமுடியாமல்
மாற்றம் என்பது
மானுடத்தத்துவம்
தேற்றிக்கொள் என்கிறார்கள்
பிள்ளைகள் முற்றத்தைமறக்கச்சொல்லி தொட்டிச் செடி
வாங்கித்தந்து
குருவிகளும் கிளிகளும்
அணில்களும் கொஞ்சும்
காதல் இல்லாத
சோகத்தில்
காய்ந்துக்கிடக்கிறதுமனது
உணர்வுகள் செத்துதான் கிடக்கிறேன்இது விதியில்லாமல் வேறென்ன?
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக