குறள் மொழி இன்பம் – 108
“யாமத்தும் ஆளும் தொழில்”
சோலையில் பார்த்து சொந்தம் கொண்டாடி
காலையில் பேசி மாலையும் மாற்றி
மணமும் புரிந்து மனம்போல் களிக்க
வேலை விடயமாய் பிரிந்த தலைவனால்
உணவும் தவிர்த்து உறக்கமும் போனது
இணையத் தேடி இமைகளும் சோர்ந்தது
கட்டுக் கடங்காது ஆட்டியே வைத்தது
காம வேட்கை கனலாய் எரிக்குதே
கண்கள் இருண்டிட உடலும் தள்ளாடுது
அன்பரைத் தேடி அணைத்திட தவிக்குதுடல்
அழுத்தம் பீறிட அடங்க மறுக்கிறதுமனம்
விழியும் செயலிழக்க வழியும் புரியவில்லை
கேளடித் தோழியென் காதல் வேட்கையை
காதல் நோய் என்னைத் துன்புறுத்துகிறதே
தேய்ந்தே போய்விடுவேன் போல் இருக்கிறதே
கையாலே எனை ஏந்தி நோய்தீர்க்கச்சொல்
சரஸ்வத்ராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக