குக்கூ கோழி
அள்ளூர் நன்முல்லை பெண்பாற் புலவரவர்
தெள்ளு தமிழில் காதலர் அக உணர்ச்சிகளை
குறுந்தொகை பாடலில் அள்ளித்
அந்தியில் வந்தான் அன்புத் தலைவன்
ஆசைக் கனிந்துவர அடைக்கலம் ஆனாள் தலைவி
அங்கம் முழுதும் உணர்ச்சிகள் ஆர்ப்பரிக்க
சங்கமம் ஆனாள் காமத் திருச்சபையில்
குழையும் தலைவன் இழையும் தலைவி
இயற்கை இயல்பால் எழுச்சியின் வேகம்
இரவெல்லாம் இன்பம் சுவைத்துக் கிடக்க
இடைவெளி இல்லா இரவே தொடர
மஞ்சமாம் தலைவனவன் நெஞ்சத்தில் அந்த
பிஞ்சான தலைவி பரவசத்தில் துயிலுற
குக்கூவென்று கோழி கூவிட திடுக்கிட்டாள்
திக்கென நெஞ்சம் அடைக்கத் தடுமாறினாள்
தத்தளிக்கும் உள்ளத்துடன் தலைவனின் தோள்விடுத்து
சித்தத்தில் தடுமாறி துயரம் அழுத்த
பாழும்கோழி படுத்துதே விடியலைச் சொல்லி
சூழும் வாளாய் தலைவனைப் பிரிக்குதே
ஊரெல்லாம் விழித்திட தான் உறங்குவதோ
யாரென்ன சொல்வாரோ எவரேனும் பழிப்பாரோ
என்ன சொன்னாலும் ஏற்புடையது ஆகாதே
சூடார ஈரமில்லை வாட்டுதிந்த வைகறை
கடமையைச் செய்த கோழியும் பகையானதே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக