வெள்ளி, 10 மார்ச், 2023

கோமாளியும் குறுஞ்செய்தியும்

 கோமாளியும் குறுஞ்செய்தியும்

உள்ளத்து உணர்ச்சிகளை
உள்ளடக்கிய கோமாளி
மணி அடித்ததும் விழுகிறான்
எழுகிறான்
பார்ப்பவரை சிரிக்க வைக்க
படாதபாடுபடுகிறான்
அவன் வலி புரியாதோர் கைதட்டிஆர்ப்பரிக்ககின்றனர்
அடுத்த நிமிடம்
டொய்ங் என்று சத்தம்
சர்க்கஸ் கூடார மணியா இல்லை
தாயியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது
மரம் விட்டு மரம் தாவும்
மந்தி வேலையை
விந்தையாக நீசெய்கிறாய்
மற்றவரை மகிழ்ச்சியாக்க
பொருளுக்காக நீ படும்
சவுக்கடியைக் காண
என்னால் முடியவில்லை மகனே போதும்
குறுஞ் செய்தியாக பிறந்தது
உன்குற்றமோ ?
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran இங்கே குறுஞ்செய்தியை அவன் அனுப்பவில்லை!
அவனுக்கு வருகிறது குறுஞ்செய்தி!
தாய்மையின் சிறப்பு இருவரிகளில் விளக்கம்!
வித்தியாசம் காட்டியுள்ளார் கவிஞர்!
நனிசிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே!
May be an image of 4 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக