வெள்ளி, 10 மார்ச், 2023

பெருஞ்சோற்றுஉதியன் சேர்லாதன்

 பெருஞ்சோற்றுஉதியன் சேர்லாதன்

சேறு நிறைந்தபொய்கையில்
செவ்வல்லிப் பூத்துக் குலுங்கும்
சேரநாட்டில் குட்ட நாட்டை
ஆண்டவன் சேரலாதன்
பிறப்பில் சிறக்குமோர்
பேரருள் பெற்றவன்
செறிந்த அறிவில்
சிறந்த தீரன்
சேரனின் பெருமையைகூறும்
சங்ககாலம் சாட்சி
மங்காத அவன் ஆட்சிக்கு
முத்தமிழ் வளர்ப்பதை
மூச்சாய்க் கொண்டவன்
முதியோரை மரியாதையுடன்
பேணிக் காத்தவன்
போர் வன்மையும்
கொடைத்தன்மையும் உள்ளவன்
நாட்டின் எல்லைகளை
விரிவு படுத்தியவன்
பிழை செய்தவனை
மன்னிக்கும் குணமுள்ளவன்
வழிபட்டால் அருள்
செய்வதில் வல்லவன்
கூத்தருக்கும் வேண்டியதை
நல்கி கூத்தையும்
பாணருக்குப் பொருள்
வழங்கி இசையையும்
புலவருக்குப் பரிசில்
கொடுத்து இயலையும் வளர்த்தவர்
முத்தமிழ் வளர்த்தவன்
பாரத வீர்ருக்கு
பெருஞ்சோறு அளித்தவன்
உதியனிவன் போர்த்திறமையை
உலகுக்குச் செப்பியது
அகநானூறும் தொகாப்பியமும்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Admin
Saraswathi Rajendran கவிஞரின் பாட்டில் புதுவேகம் காண்கிறேன்!
உதியன் வள்ளண்மை கொடுத்தக் கொடையோ!
துயர் தீர்த்து துள்ளல் தரும் தொடக்கம்!
'சேறு நிறைந்த பொய்கையில் செவ்வல்லிப் பூத்துக் குலுங்கும் சேரநாட்டில் குட்டநாட்டை ஆண்டவன் சேரலாதன்;
எந்தவொரு அடிக்கணக்கிலும் அமையவில்லை யெனினும் இசையொழுக்கால் மேம்பட்ட வரிகள்;
ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லாம்ப்பை ஞாபகப் படுத்தும் நடை;
அடுத்த வரிகள் ஓசை நயத்தில் வேகம் காட்டுகிறது;
கவிதை சிறப்பு வாழ்த்துகள் கவிஞரே!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக