வெள்ளி, 10 மார்ச், 2023

நாளவெண்பா

 நாளவெண்பா

நிடத நாட்டு
மன்னனாகிய நளன்
வேனில் காலத்தில
ஒருநாள் இளைப்பாற
மலர் சோலைக்கு
செல்ல அங்கு
கண்ட அன்னப் பறவையின் அழகில் மயங்கி
அதைக் கைப்பற்ற
அஞ்சி வாடிச்சென்ற
அன்னம் திரும்பிவந்து
வஞ்சியவள்‌ தமயந்தியின்
பேரழகைச் சொல்ல
காதல் வயப்பட்டான்
நளன் தமயந்தியிடம்
உதயப் பொழுதொன்றில்
விதர்ப்ப தேசத்து
வீமனின் மகளாம்
தமயந்தியிடம் தகைசால்
நளனைப்பற்றி இயம்ப
களிப்புற்ற தமயந்தியின்
உள்ளமறிந்த வீமன்
சுயம்வரம் அறிவித்தார்
மண்ணுலக விண்ணுலக
மன்னர்கள் சூழ்ந்திருக்க
மாலை சூட்டி
நளனையே மணாளனாக
ஏற்றாள் நங்கை
விதியின் வலிமையால்
சூதாடி வறியவனான்
மனைவியைப்பிரிந்து
மன உளைச்சலானான்
மூண்டவினை தீரந்திட
தமயந்தியின் முயற்சியால்
இணைந்து வாழ்ந்தனர்
இன்னல் நீங்கி
சரஸ்வதி ராசேந்திரன்
May be an image of 1 person and text that says 'நள வெண்பா இலக்கியப்பி ருந்தாவனம் காவியக் களஞ் காவியக்களஞ்சியம் சியம் சிறப்பு வெற்றியாளர் 需 వైన్ நள வெண்பா சரஸ்வதி ராசேந்திரன் වව'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக