களவழி நாற்பது
செங்கண்ணானுடன் போரிட்ட
சேரன் சிறைபட்டான்
சிறையிலே காவலர்கள்
சிறுமைப் படுத்தினர் சேரனை
அருந்தநீர் கேட்டசேரனை
வருந்தும்படி பதிலுரைக்க
மதியாதவனுடன் மன்றாடுவதைவிட
மானமே பெரிதென சேரன்
மரணத்தைத் தழுவினான்
நட்பினைப் போற்றும் பொய்கையார்
நுட்பமாய்் புகழ்பாடி
நண்பனை விடுவிக்கவேண்டினார்
விடுவித்தான் சோழனுமே
மானத்தை மதித்தவன்
மாண்பான வீரனவனின்
மரணத்தைக் கேட்டு
மனம் வருந்தினார் பொய்கையார்
களவழிகாட்டும் காட்சியிது
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக