தையல்
உயரிய ஒழுக்கத்தையும்
சிறந்த நீதிகளையும்
எளிமை இனிமையாய்
படிப்படியே பயிற்றுவிக்கும்
நல்ல நெறி நின்று
நாளும் வழிப்படுத்த
ஆக்கி வைத்தார்
ஆத்திச்சூடி அறநெறினூலை
தையல் என்ற சொல்
பெண்ணின் பருவத்தில்
ஒன்றான பேதைஎன்பதாய்
எழுதப் பட்டியிருக்கிறது
பேதமை என்பதொன்று
யாதனின் ஏதல்கொண்டி
ஊதியம் போகவிடல்
வள்ளுவத்தை பொருளாக. விளம்பியது கண்டோம்
குறுகத் தரித்த
குறளின் வழியே
குன்றாதிந்த ஆத்திச்சூடி
காட்டுமிந்த கருத்தையே
கைகேயின் சொல்கேட்டு
தசரதன் பட்டபாடும்
சூர்ப்பனகை சொல்கேட்டு
ராவணன் வீழ்ந்ததும்
விதி விலக்கான பெண்களால்
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
மெய்ப்பொருள் காணவேண்டும்
என்பதற்காக வடித்திட்ட
வாக்கே அவ்வையின் வாக்கும்
தையல் சொல் கேளென
தனித்துவமாய்ப் பாடியவன் பாரதி
அடிமைப்பட்டுக் கிடந்தபெண்களை
அடுப்படிவிட்டு அலுவலகம் செல்ல
எழுச்சியூட்டி தையலுக்கு
உயர்வைக் கொடுத்தவன்
பொருளெனும் பேரின்பம்
பகுத்துணரும் ஞானியவள்
பகிர்ந்ததில் பொருளுண்டு
அறியாத பேதைசொல்வதை
ஆராயாமல் கேட்காதே
அறிவுபூர்வமாக பாடினாள்
அவ்வையும் பாரதியும்
ஆணிற்கு இணையென
பெண்ணை உயர்த்தியே
பெருமைபட பாடியுள்ளனர்
அருமை அறியாமல்
அரற்றுவாரசிலர்
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Admin
Saraswathi Rajendran வள்ளுவத்தின் பொருளே இந்த ஒளவையின் ஆத்திச்சூடி என்பதை திறம்பட சொல்லியிருக்கிறீர்.
எப்பொருள் வாய் கேட்பினும்
மெய்ப்பொருள் காணவேண்டும்
என்பதற்காக வடித்திட்ட
வாக்கே அவ்வையின் வாக்கும் - அதுவே உண்மை
சிறப்பான படைப்பு.
வாழ்த்துகள் கவிஞரே.
Boost this post to reach up to 293 more people if you spend ₹578.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக