நின்னிலும் நல்லன்
வெண்ணிக் குயவளாம் வித்தகப் புலவர்
தன்னின் நியாயத்தை தயங்காமல் பாடினாள்
கரிகால் வளவனின் களத்தின் வீரத்தை
அரிய சாதனை ஆற்றினான் கல்லணையால்
நின்னினும் அவன் நல்லன் அல்லவோ
மானம் பெரிதென நாணி உயிர்விட்டு
மன்னன் சேரன் மகிமை கொண்டானே
களிப்புநடை போடும் யானையின்மேல் அமர்ந்து
கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டி
காற்றையே ஆண்ட வலிமைவழி வநதவனின்
போற்றல் அறியவைத்த தமிழரின் பெருமை
சாற்றிய வெண்ணிக் குயத்தியின் புகழ்ஓங்குக
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக