கண்ணகியும் காற்சிலம்பும்
*****************************
நாணமும் மடமும்
நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும்
மாநாய்கன் மகள்
கோவலனின் துணைவியவளே
நீதி தவறிய
வேந்தனை ஒறுத்தாள்
நிலை தடுமாறிய
துணைவனை பொறுத்தாள்
நற்குணங்கள் ஒன்றையே
நற்பிறப்பாய்க் கொண்டவள்
சிலம்பால் விளைந்தது
சிதறிய வாழ்க்கை
கற்பு என்பது
அடக்கம் மட்டுமல்ல
சீற்றமும் கொண்டது
என்பதை உணர்த்தும்
பாடமாகி நின்றது
ஆராயாத அவசரதீர்ப்பு
அரசுக்கு நேர்ந்த
அவமதிப்பு என்றாலும்
தவறை உணர்ந்து
உயிரை விட்டபாண்டியனின்
பெருந்தன்மையை சொன்னது
பத்தினி சாபம்
பலிக்கும் என்று
பாரதத்திற்கு உணர்த்தினாள்
மதுரையை எரித்து
மாதரார் தொழுதேத்தும்
மாண்புடை கண்ணகியின்
சிலம்பால் விளைந்த
சிலப்பதிகாரம் காலத்தை
வென்ற காப்பியமானது
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக