வெள்ளி, 10 மார்ச், 2023

உண்மைக் கொண்டாட்டம்

 உண்மைக் கொண்டாட்டம்

இல்லாரும் இருப்போரும்
நல்லோரை நினைவிலிருத்தி
எல்லோரும் கொண்டாடுவோம்
அன்பாலே ஒன்றிணைந்து
ஆனந்தம் கொள்வோமே
இனிதான திருநாளாம்
தீபத் திருநாளே
தீபம் ஏற்றிட
துலங்கிடும் வீடும்
சீறும் பட்டாசு
சிறுவர்கள் கையில்
உறவுக் கூட்டத்தோடு
உல்லாசமாய்க் கொண்டாடு
பண்பு தமிழ்
பண்பாட்டில் நின்று
விரும்பி வருவோரூக்கு
விருந்தளித்து பரிமாறு
குணத்தோடு நீயும்
குதூகலமாய் கூடி
கும்மாளமிடு குடியைத்தொடாது
மதுவின் மயக்கம்
உணர்வைக் கெடுக்கும்
உயிரையும் எடுக்கும்
குணத்தை இழக்கும்
குடும்பமும் வெறுக்கும்
மணக்கும் வாழ்வும்
மதுவால் வீழும்
நிலவும் மகிழ்ச்சியும்
கலகத்தில் முடியும்
வேண்டாமே வேதனை
குணத்தோடு நீயும்
குடியைக் களைந்து
சுற்றம் சுகம்கொண்டு
சுகமாகக் கொண்டாடு
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 10 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக