சனி, 11 மார்ச், 2023

நித்திலம் நித்திலம்

 நித்திலம் நித்திலம்

நித்திலத்தில் மானிடர்
மூழ்கி எடுக்கும்
ஆழ்கடல் நித்திலமே
கரைசேரும் மீன்போல
கலம் சேரும்
கரைகொ ணர்ந்தே
பிளந்திடுவார் சிப்பியை
உள்ளிருப்பதை எடுத்திடுவார்
நித்திலம் நிறைந்திடும்
ஏழைகளுக்கு எட்டாக்கனி
நித்திலம் என்பார்
செல்வர்களின் கழுத்தில்
சிறப்பாக அமர்ந்திருக்கும்
பாண்டிமா தேவியின்
சிலம்பில் தவழ்ந்தது
கண்ணகி வாழ்விலது
காலனாய் வந்தது
நித்திலத்தில் அணிமணிகளில்
நித்திலமே சிறந்ததென
நிறைந்த பெருமைக்குரியது
திருமகளும் கலைமகளும்
திருஆர மாய் பூண்ட அணிகலன்
பெருமையுற்ற நித்திலமே
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Admin
Saraswathi Rajendran பாண்டிமா தேவியின்
சிலம்பில் தவழ்ந்தது
கண்ணகி வாழ்விலது
காலனாய் வந்தது - ஆகா...
காப்பியத்தையே கவிதையில் நிறைத்திட்டீர்.
வெகு சிறப்பு கவிஞரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக