குறள் மொழி இன்பம்(134)
மனைவியின் மையலில்
மயங்கி கிடந்தவன்
மன்னனின் ஆணையை
மனதினில் கொண்டு
போர்க்களம் புகுந்தான்
நாட்டைக் காக்க
வீட்டை மறந்து
வீரியம் கொண்டு
விரைந்து செயலாற்றி
வெற்றிக் கனியை
தட்டிப் பறித்து
மற்போர் வெற்றியால்
உற்சாகம்பிறக்க
மனைவியின் நினைவும்
மனதைக் கவ்வ
இல்லம் செல்ல
இதயம் விரும்பிட
நானும் விரைந்தே
பாய்ந்திடும் நீராய்
பாவையைப் படர்வேன்
வினை முடித்து
வெற்றியுடன் வரும்
வீரனுக்கு விருந்தினை
மனைவியும் மாலையில்
பொழியக் காத்திருக்கிறாள்
பொன்னான முத்தங்களை
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக