வியாழன், 16 மார்ச், 2017

முத்தமிழ் களம்08 / 03 / 2017 முதல் 13 / 03 / 2017 வரை நடைபெற்ற புதுக்கவிதை தலைப்பு - பிள்ளை நிலா

வணக்கம் நட்புறவுகளே
எமது குழுமத்தில் 08 / 03 / 2017 முதல்
13 / 03 / 2017 வரை
நடைபெற்ற புதுக்கவிதை
தலைப்பு - பிள்ளை நிலா
எனும் புதுக்கவிதையின் வெற்றியாளர்கள்
பட்டியல்.
கவிதாயினி. செல்வராணி கனகரெட்ணம்
கவிஞர். ராமநாதன் கணபதி
கவிதாயினி. மகேஸ்வரி கண்ணன்
கவிஞர். ந.பாண்டியராஜன்
கவிதாயினி. சரஸ்வதி ராசேந்திரன்
வெற்றியாளர்களுக்கு
முத்தமிழ்க்களம்
குழுவினரின் பாராட்டுக்கள்.
பிள்ளை நிலா
பிள்ளை நிலா மனதை
கொள்ளைக் கொள்ளும்
வெள்ளை நிலா என்
மகளாய் பிறந்த மஞ்சள் நிலா
நீ தானேஎன் வீட்டின் சொத்து
உன் வரவுதானே எனக்கு தித்திப்பு
மடியில் தவழும் மல்லிகையே
மலடி என்ற பெயரை தகர்த்த மாணிக்கமே
கண்கள் இரண்டும் பூச்செண்டு
எண்ணம் இனிக்கும் நற் கற்கண்டு
அன்பில் வாழும் பூஞ்சிட்டு உன்
அன்னை பாடுறேன் தாலாட்டு
மழலை மொழியில்
குழலிசை கேட்டேன் உன்
கள்ளச் சிரிப்பில் எனை மயக்கிய
கருமை நிற கண்ண பரமாத்மா நீ
தேடக் கிடைக்காத தங்கம் எனைத்
தேடி வந்த செல்வம் நீ
உன் குறும்பு செயல்கள் என்னை
குதூகலப்படுத்தும் கவலைகள் போக்கும்
சரஸ்வதிராசேந்திரன்

அமிர்தம் குழுமத்தில் கடந்த 10/03/17 மற்றும் 11/03/17 ஆகிய இரண்டு நாட்கள் நடைப்பெற்ற கிராமிய கவிதைப்போட்டி

நமது அமிர்தம் குழுமத்தில் கடந்த 10/03/17 மற்றும் 11/03/17 ஆகிய இரண்டு நாட்கள் நடைப்பெற்ற கிராமிய கவிதைப்போட்டியில் சிறந்த முறையில் கவிதை எழுதி சான்றிதழ் பெறுகிறார் கவிதாயினி திருமதி. Saraswathi Rajendran அவர்கள்.
கவிதாயினிக்கு அமிர்தம் குழுமத்தின் இனிய வாழ்த்துக்கள்
நாட்டுப்புறப்பாடல்--10-2017
அந்தி சாயும் நேரத்துல
ஆத்தோரம் போற புள்ளே
அத்தை மகள் ரத்தினமே
முத்தம் ஒண்ணு தந்துபோடி
தேடித்தேடி நான் அலைஞ்சேன்
தித்திக்கும் உன் பெயரைச்சொல்லி
பாடி உருகி ஏங்குறேனே
பாவி மகள் உனக்கு கேட்கலையா ?
உன்னையே எண்ணி எண்ணி
உற்சாகம் நானடைந்தேன்
ஆலவாய் கரும்பு போல நானும்
ஊருல வெறும் வாய்க்கு அவலானேன்
கண்ணு ரெண்டும் மூடாம
உன்னை எண்ணி நூலானேன்
வாசக் கருவேப்பிலையே
நேசத்தோடு வந்துவிடு
கட்டிக்கப் போற பெண்ணே
ஒட்டிகிட்டாத் தப்பில்லே
மஞ்சத்தாலி கொண்டு வாரேன்
மல்லிகைப்பூ பழம் வெத்திலையோடு
பரிசம் போட நாளைவாரேன்
சரஸ்வதிராசேந்திரன்

கவிஅகரம் மார்ச் 8ம்தேதி குறும்பா போட்டிகவி•••••••••••••••••••••••••••••••
கலியுக கணவன்
காலையில் தரும்
கழு நீரானாலும்
காப்பி அருமை என்பான்
மங்கை அவளை
மருவியே வாழ்தல் வேண்டின்
கொடுமை வாழ்வை ஏற்று
கொள்வதே பேரறிவுடமை என
அகம் கொதித்தாலும்
புறத்தே போற்றிப்பாடுவான் மொத்தத்தில் முரண் பாட்டின் முழுமை அவன்
சரஸ்வதி ராசேந்திரன்அகரம்

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 0 9/03/2017 அன்று நடந்து சந்தித்த வேளை எனும் தலைப்பில் காதல் கவிதைப்

இனிய இரவு வணக்கம் கவி உறவுகளே..
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
0 9/03/2017 அன்று நடந்து சந்தித்த வேளை எனும் தலைப்பில் காதல் கவிதைப் போட்டியில் கவிதை எழுதிய கவிஞர்
சரஸ்வதி ராசேந்திரன்
. அவர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார். கவிதை எழுதிய அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் பிரிதிவிராஜ் லோஜி அவர்களுக்கும் வாழ்த்துகள் .
தலைமை நிர்வாகி ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயி முகம்மது
மற்றும் பொறுப்பாளர்களுடன்
சந்தித்த வேளை
உன்னைச் சந்தித்த வேளையில்தான்
என்னையே நான் தொலைத்தேன்
உன் அம்பு விழிகளால் என்னை
உன் அன்பு வளையத்தில் இணைத்தாய்
சித்திரப் பூவிழி என்னைப் பாரம்மா உன்
பத்துவிரல் என்னை அணைக்கத்தானம்மா
உனக்காகத்தானே நான் பிறவி எடுத்தது
எனக்காகத்தானேஉன்னை கடவுள் படைத்தது
மை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
முதல் முதலாய் இழந்தேனே தையல் உன்னிடம்
சிறகடிக்கும் ஆசைகளை சிந்தையில் அடக்குவேன் நீ
சிரித்திருக்கும் அழகில் நான் என்னை மறப்பேன்
புத்தியும் உன்னால பேதலிச்சுப் போச்சு
நித்திலமே இன்னுமென்னை ஏன் வதைக்கலாச்சு
கண்ணாலே மடக்கி விட்டு என்னை மறக்கலாகுமா
பெண்ணே உன் சம்மததைச் சொல்லி என்னை ஏற்றுக்கொள்ளம்மா
சரஸ்வதிராசேந்திரன்

கவியருவி(ஏப்ரல் 2017) மின்னிதழ்

மகளிர் தினச்சிறப்புக் கவிதைப்போட்டியில் 'ஆவதும் பெண்ணாலே' தலைப்பில் புதுக்கவிதை, மரபு கவிதை, ஹைக்கூ வகைமையெனத் தம் திறன்களை வெளிப்படுத்திய அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டி மகிழ்கிறோம்.
.
இப்போட்டியில் சான்றிதழ் பெற்றுள்ள 20 கவிஞர்களின் படைப்புகளும் நமது கவியருவி(ஏப்ரல் 2017) மின்னிதழில் வெளிவரும்.
வாழ்த்துகள் அனைவருக்கும்
இவண்,
கவியருவி நிர்வாகக்குழு
ஆவதும் பெண்ணாலே
புதுக்கவிதை
பெண்கள் நாட்டின் கண்கள்
கண்கள் இல்லையென்றால்காட்சி ஏது
பெண்ணுலகம் இருந்தால்தான்
மண்ணும் விண்ணும் வாழும்
அன்பும் பண்பும் கொண்டவள்
நன்மை நிறைந்த நிறைமன
குணங்கள் கொண்டவள் பெண்
தன்னலம் கருதா தாய்மை அவள்
மனைத்தக்க மாண்புடையாளென்றும்
மனைமாட்சிக்குஎனை மாட்சியும் இல்லை
தகை சான்றவள் பெண்ணென்றும்
மனை மாட்சிக்கு மங்கலம் என்றும்
வள்ளுவரே புகழ்ந்திருக்கிறார் பெண்ணை
குழந்தையின் மனதிலே தாயாகிறாள்
குலமகள் முதிர்ச்சியில் கடவுள் ஆகிறாள்
கணவனின் அன்பிலே தாரமாகிறாள்
கற்புக்கரசியாய் சிறந்து விளங்குகிறாள்
சோர்வு இல்லாமல் உழைத்திடுவாள் பெண்
சுகத்தோடு வாழ உதவிடுவாள்
அன்பால் நம்மை அடக்குபவள்
பண்பால் நம்மை உயர்த்துபவள்
அன்னையாம் சக்தி அவளே
பெண்மையின் பெருமை அறிவீர்
உலகில் பெண்ணே இல்லையென்றால்
உலகம் எப்படி இயங்கும் என்பீர்
சரஸ்வதி ராசேந்திரன்

சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/03/2017 தின பாரதிதாசன் போட்டியில், ஒற்றைக்கால் வாசலில் என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
வணக்கம் கவி உறவுகளே..
சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/03/2017 தின பாரதிதாசன் போட்டியில், ஒற்றைக்கால் வாசலில் என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர் Saraswathi Rajendran அவர்களை குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: அர்ச்சனா குருநாதன்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்

ஒற்றைக் கால் ஊஞ்சலிலே
ஒற்றைக்கால் ஊஞ்சலிலே
உற்றுக் கண்ணி மையாமல்
சற்றும் உடலசைக்காமல்
வெற்றி ஒன்றே குறியாக
நிற்கும் நாரையார்
கோழியோ இட்ட முட்டைமேல் அமர்ந்து
அடைகாத்து குஞ்சு பொரிக்கும் மீனோ
தன்னுடைய பார்வையாலேயே
முட்டைகளை குஞ்சுகளாக்கும்
வித்தை கற்றது
ஓடு மீனோடக் கண்டு
உவகையால் வேட்கை கொண்ட
பீடுறு நாரையொன்று
பிரியமாய் வாய் திறந்து
வீழுறு சிறு மீன் தன்னை
விழுங்குதலுக்கு காத்து நின்றது
காலோடு சலங்கை கட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேட்டு
விதி முடிய மீனும் விரைந்து வந்தது
தொட்டுத்தழுவும் துள்ளித் திரிந்த மீனை
கட்டியணைத்து வாயில் நுழைக்கும் நாரை
கொக்கின் குறிக் கோள் போல
மக்களும் இலக்கை நிர்ணயம் செய்தால்
இலக்கை எளிதில் அடையலாம்
ஏற்றமாய் சாதனை புரியலாம்
சரஸ்வதிராசேந்திரன்

நூல் ஆய்வரங்கம் தமிழ் பட்டறை

தோழமைகளுக்கு வணக்கம்!
தமிழ்பட்டறையில் ஆண்டுவிழா போட்டிக்காக நடைபெற்ற வண்ணக் கனவுகள் கவிதைப்போட்டிக்காக கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட கவிதையை "நூல் ஆய்வரங்கத்திற்காக " எடுத்துக்கொண்டுள்ளேன்.
*******************************************
திண்ணைப்பள்ளி : நூல் ஆய்வரங்கம்
********************************************
பதிப்பகம் : தமிழ்ப்பட்டறைப் பதிப்பகம்
பதிப்பாசிரியர் : உயர்திரு சேக்கிழார் அப்பாசாமி அவர்கள்
எழுதியவர். : கவிஞர் சரஸ்வதி இராஜேந்திரன் அவர்கள்
நாம் உறங்கும் போது கனவு விழித்துக்கொள்வதும் , நாம் விழிக்கும் போது கனவு
காணாமலும் மறைந்துவிடுவதுண்டு.
இங்கு கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன் அவர்கள் கனவு காண்கிறார்!
அதுவும் எப்படி என்றால் வண்ண வண்ணக் கனவுகளில் மிதக்கிறார்.
அளவுகளும் வரையரைகளும் இல்லையாம், அடடா...
அடுக்கடுக்கா கண்டுகொண்டே இருக்கிறார் !
எப்படி இருக்கும்!!!!!
முதல் கனவே , பச்சை கிளியாய் மாறுவோம் !
இச்சைக்கிளியாய் பாடுவோம் என்ற பாட்டுக்கேற்ப - ஜோடி சேர்ந்து , வயல் வரப்பில் காடு மேடுகளில் களித்தே இன்புற்று சுதந்திரமாக பறக்க வேண்டும் , என்பதே!
அடுத்து இளமைகாலத்துக்கு அழைத்துச்செல்கிறது இவரது கனவு !
ஆமா யாருக்குத்தான் ஆசை இருக்காது !
மாடிப்படிகளில் மான்குட்டி போல துள்ளியாடி ஒடவேண்டும்....
துள்ளி குதித்து இறங்கலாம், தாவி ஏறலாம்!
துள்ளி ஆடி , மான்குட்டி போல எப்படி ஒட முடியும் , வேண்டுமென காண்கிறார்.
அலைகள் மோதி ஈரமாக்கி விட்டுச்சென்ற மணல் மீது ,
மனதுக்குப் பிடித்தமான காதலனோடு , நெருக்கமாக அமர்ந்தபடி
அங்கு விற்கும் தேங்காய் , மாங்காய் , சுண்டலை சுவைத்து ரசித்து சாப்பிட வேண்டுமாம் !!
நிச்சயமாக காதலர்களுக்கு ஊக்க மருந்துதான் இந்தக்கவி....ஆனாலும்,
அடுத்து வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைக்கு தாவுகிறது கனவு !!!
அலைபேசியில் புதுப்பாடல் கேட்டுக்கொண்டே சுற்றவேண்டுமாம் ...ஆனாலும்
ஏழைவீட்டுக்கு , தென்றலோ நிலவு வெளிச்சமோ வர மறுக்குமா ?
என ஒரு பெண்ணுக்காக......
சமூகத்தில் , வலிகள் நிறைந்த , அங்கம் சிறிது குறைந்த ஒரு கன்னிக்கு இதுபோல கனவுகள் வரக்கூடாதா , வந்த கனவுகள் வாழ்க்கையில் கை கூடாதா ??
என தன்னுடைய வேதனையை ,
மனதில் ஒரு முள் குத்தியதுபோல வலியில் சோகம் இழையோடி படர முடித்துள்ளார் இந்த கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன் !
எளிய சொற்களில் , அழகான வரிகளில் , அளவோடு வடிவமைக்கப்பட்ட கவிதை!
தமிழ்ப்பட்டறையின் அன்புமிகு சகோதரி , ஆற்றல்மிகு கவிஞர் !
மிகச் சிறந்த எழுத்தாளர் !
சமூகநலச் சிந்தனையோடு எழுதும் ஆற்றல் மிகக்கவர் !
அவர்களை வாழ்த்துவோம் !
வாழ்த்துகள் சகோதரி ! வளர்க தங்களின் எழுத்துலக பணி !!
வாழ்க தமிழ்ப்பட்டறை ! வளர்க தமிழ்ப்பட்டறை பதிப்பகம் !
நன்றி. :)

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 08/03/2017 நாள் நடந்த படப் போட்டியில்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
08/03/2017 நாள் நடந்த படப் போட்டியில்
கவிதை எழுதிய
கவிஞர் [ சரஸ்வதி ராசேந்திரன்]
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் சேகு இஸ்மாயில் முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் ***
படப்போட்டி சான்றிதழ் போட்டியாளர்
ஈன்ற கன்றுக்கு
ஈந்தளிக்கும் தாய்ப்பசு
தாய்ப்பால் இல்லாத குழந்தைக்கும்
தானமிடும் பசும்பாலை
புல்லு கொடுத்தா பால் கொடுக்கும்
மடி சுமக்கும் பாலை
மங்கையவள் கறப்பாள்
ஏர் ஒட்டவும் வண்டி இழுக்கவும்
எருதாகப் பயன்படுகிறது
கோமாதாவை குலமாதாவாக
கொண்டாடித் தொழுவோம்
தேவைக்குப் பால் கொடுக்கும்
தீதிலாச்செல்வத்தை தீதின்றி காப்போம்
ரத்தத்தை பாலாக்கி
பெத்தப் பிள்ளைக்கு
ஊட்டுவாள் தாய்
ரத்தத்தை கன்றுக்கும் கொடுத்து
மொத்தஊருக்கும்கொடுக்கும் பசு
சரஸ்வதிராசேந்திரன்

வியாழன், 9 மார்ச், 2017

அமுத சுரபி

அந்திசாயும் நேரங்களில் ஆற்றாங்கரை ஒரங்களில் நாணல் ஆடும் கரையினிலே
நாணத்தோடு நீ நின்றாய்
வானம் பார்த்த பூமியாக நான்
கானம் பாடும் குயிலாக நீ
சேற்றுக்குள்ளே செந்தாமரை நீ
ஆற்றில் ஆடும்தென்றல் நான்
தஞ்சமுன்னு வந்தவனை
நெஞ்சத்திலே வாங்கி விடு
தாரமுன்னு பட்டம் தந்து
தோளிரண்டில் தாங்கிக்கிறேன்
பாசவலை வீழும்போது
பறவை பறக்க முடியாது
நேசத்தோடு நான் நின்றேன்
மோசம் செய்யாம வா புள்ளே
மனசாலே நான் நினைத்தேன்
மகராணி நீ வேண்டும்
ஆளைக்கொல்லும் ஆபத்து காதல்
உன் அன்பாலே விலகாதா ?
கோவை போல இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
மஞ்சத்தாலி செஞ்சு வாரேன்
கொஞ்சும் கிளியே நெஞ்சில் அணை
சரஸ்வதிராசேந்திரன்

சங்கத்தமிழ் கவிதப்பூங்கா

பாரதி தாசன் சான்றிதழ்போட்டியாளர்
கண்ணீரில் கலந்த வாழ்க்கை
அலைகடல் தேடித்தானே எங்கள் வாழ்க்கை
வலை வீசினால்தான் மீன் கிடைக்குது
மலையைத்தள்ளி எலி பிடிக்கும் வித்தையிது
நிலை குலைந்து போகும் படகு காற்று வீசினால்
கடலுக்குச் சென்றவன் திரும்பி வரும் வரை
உடலுக்கு உணவு கொண்டு வந்தால்தான்
கலையிழக்கும் கணவன் வரும் வரை
அலைகளைப்போல் விழியிரண்டும் அலையாடும்
ஒரு நாள் போனவன் மறு நாள்தான் வருவான்
ஒவ்வொரு நாளும் வரும்வரை துயரம்தான்
ஒரு சாண் வயிற்றுக்காக வாழ்வு முழுதும் போராட்டம்
உயிரை பணையம் வைப்பது தினம் நடக்கும் வாடிக்கை
ஆதவன் தயவில்தானே நிலவு காயுது
காதலன் தயவில்தானே பெண்மை ஓங்குது
வரும் புயலையும் எதிர்த்துத்தானே வலை வீசுறான்
வாழ்வுக்காக அனுதினமும் போராடி சாகிறான்
தண்ணீரில்தான் தினம் வாழ்க்கை ஓடுது
கண்ணீரில்தான் தினம் வாழ்க்கை கலந்து ஓடுது
சரஸ்வதிராசேந்திரன்

உன்னோடு நான் இருந்தால்

உன்னோடு நானிருந்தால் உலகம் என் வசமாகும்
என்னுள் வரும் மாற்றம் என்பது நிஜமாகும்
என்ன மாயம் நீ செய்தனையோ
என்னுள் என் சாயலே இல்லைஇப்போது --19
உன்னோடு நானிருந்தால் உத்தம வாழ்க்கைதான்
என்னுள் உலக அழகின் இனிய சுவைகள் கூடும் நிச்சயம்
உன்னுள் சுரக்கும் அன்பு என்னுள் நிம்மதி சேர்க்கும் -17
உன் கன்னக் குழியில் நான் சிறையிருப்பேன்
உன் பின்னல் சடையில்
என்னை பின்னிக் கொள்வேன் 11
உன்னோடு நான் இருந்தால்
உள்ளங்கையில் உன்னை தாங்குவேன்
உன்னைக் காக்கவே இந்த
மண்ணில் உயிர் வாழுவேன் --12
உன்னோடு நானிருந்தால்
உலகோரும் எனை நாடிப் போற்றுவார்
உனக்காக வாழும் உள்ளம் இது
உறவால் தொட ஏங்குகிறேனே -13
சரஸ்வதிராசேந்திரன்

பரிசம் போட காத்திருக்கேன்

பரிசம் போட காத்திருக்கேன்
உன்னைப் பார்த்த நாள் முதலா
உறக்கம் கெட்டு நான் கிடக்கேன்
பூப்போல என் மனசுக்குள்ளே
புயலைப் போல வந்த புள்ளே
மாமன் பெத்த மருக்கொழுந்தே
மனசுக் கேத்த மகிழம் பூவே
சம்மதத்தை சொல்லிப் போடு
சட்டுன்னு நானும் வாரேன்
முத்து மாலை வாங்கித்தாரேன்
முல்லைப்பூ சூட வாரேன்
முறுக்கு அதிரசம் கூட தாரேன்
முறுக்காம நீயும் வாடிபுள்ளே
பணம் காசு தேவையில்லே உன்
பாசம் மட்டும் போதும் புள்ளே
தரிசனம் தந்து தலையசைச்சிடு
பரிசம் போட காத்திருக்கேன்
சரஸ்வதிராசேந்திரன்

கனவுகளில் கசியும் குருதிகள்

கனவுகளில் கசியும் குருதிகள்
உன் விழிவாசல் திறந்துதானே
என்னை உள்ளே அனுமதித்தாய்
உன் சம்மதத்திற்கு பின்புதான்
நான் சொர்க்கத்தை வாங்கினேன்
எனக்கொரு துணையாக என்றும்
உனைத்தானே நான் நினைத்தேன்
கனவுகளை எழுதி மனசுக்குள் படைத்தேன்
தினம் தினம் உனைத்தான் யோசித்தேன்
அன்பாலே எனை ஈர்த்துத்தானே
தன்பாலே கோர்த்துக்கொண்டாய்
எனை அணைக்கும்போதெல்லாம்
இணைங்கி வளைந்து கொடுத்தேன்
உன் கரங்களில் ஒளித்துவைத்திருந்தகத்தி
என்னை காயப்படுத்தினாலும் கூட
உன் மீது கொண்ட காதலால்
உன்னையும் பொறுத்துக்கொண்டேன்
உன் அன்பால் எப்படி முடி சூட்டினாயோ
உன் கரங்களில் எனக்கான முள் முடியும்
அன்றே தயார் பண்ணி வைத்திருந்தாயோ
நானறியேன் நங்கையே நன்றாக இரு
காவிரியாய் மனம் இறங்கி நீயும் வரவில்லை
காற்றாடி போலறுந்து வீழ்ந்து விட்டேன்
கனவில் கசியும் குருதியாய் கண்ணீர்
என் கன்னத்தில் வடிகிறது நசிந்த காதலால்
சரஸ்வதிராசேந்திரன்

சங்கத்தமிழ்கவிதை பூங்கா

காட்டுப்பூ பூத்திருக்கு
கன்னி மனம் காத்திருக்கு
காலக் கருக்கலிலே
களத்து மேடு போற மச்சான்
கடக் கண்ண காட்டிவிடு
கஞ்சி கொண்டு நானும் வாரேன்
செக்கச் செவத்தப் பெண்ணே
செவியெல்லாம் இன்பத்தேனே
வெயிலிலே வராதே கண்ணேஉன்
வெள்ளத்தோளு கருத்துவிடும்
மாமன் பெத்த மாரிமுத்தே என்
மனசுக்கேத்த சிரிப்பழகா
வெயிலு படாம வாழமுடியுமா
வெள்ளாமை விடாம வயிறு நிரம்புமா
அத்தைப் பெத்த ரத்தினமே
அடியே என் மருக்கொழுந்தே
உள்ளதை நல்லா பேசிப்புட்ட
உம் மனசையும் எனக்கு காட்டிப்புட்ட
காத்திருக்கேன் வந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்

கனவிலும் உன் நினைவே

கனவிலும் உன் நினைவே
கண்ணுக்குள்ளே காந்தம் வச்சு
கவர்ந்திழுத்த கன்னிகையே என்
எண்ணத்திலே இடம் பிடித்து
கண்ணாமூச்சி ஆடுறியே
வண்ணப் புது மலரே உன்
கண்ணசைவில் நான் கவியானேன்
கண்ணோடு கண் பண்பாடினால் உன்
பொன்மேனி என் வசமாகும்
கண்ணம்மா நீ தென்றல் காற்று
என் இன்பக்கேணியின் ஊற்று
பொங்கும் என் மனதை ஆற்று
புன்னகையால் மனதை தேற்று
துடிப்பான என் உள்ளம்
துவளும் கொடியாக விடலாமா
உன் காலடியில் படியாய் கிடந்து
பணிசெய்வேன் பசுங்கிளியே
விழி வைத்து காத்திருக்கிறேன்
எழில் நிலா உன் வரவுக்காக
நித்திரையும் இல்லையடி
புத்தியும் வேலைசெய்யவில்லை
காசு பணம் பெரிதல்ல உன் அன்புக்காக
ஊசிமுனையில் தவம் இருக்கேன்
கனவிலும் உன் நினைவே
நினைவிலும் உனை சுமப்பேன்
சரஸ்வதிராசேந்திரன்

கடைசியில் மிஞ்சுவது

கடைசியில்—மிஞ்சுவது
அண்டத்தில் பிறந்தவரெல்லாம்
பிண்டத்தில் ஒரு நாள் அடக்கம்
கண்டபடி பொருள் சேர்க்க இதில்
சண்டை போட்டு அலைவதேன் ?
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை
பொருள் பொதிந்த வார்த்தைதான் அந்த
பொருள் அளவோடு இருந்தாலே
பொருந்தாதா வாழ்க்கை பயணம் ?
கோடி கோடியாய் பணத்தை சேர்க்க
ஓடி ஓடி ஓய்வில்லாமல் தேடிஅலைந்து
கூடை கூடையாய் குவித்து வைத்தாலும்
பாடையிலே போகும் போது கூடவா வரும்?
நிறைந்த மனதை உடையவனே
நிம்மதியாக வாழ்கிறான்
செல்வத்தின் நிலையாமையை அறிந்தவன்
செல்வத்தைத்தேடி பேயாய் அலைவதில்லை
கூடுகின்ற நட்பு கூட்டமும்
நாடுகின்ற உறவு கூட்டமும்
ஆடை கழற்றுவது போன்று
ஜாடையாக ஒதுங்கிடுவார் செல்வம் போனால்
யார் யாரையோ வஞ்சித்து பொருள்
சேர்த்து என்ன பயன் உனக்கு ?
கடைக்கூட்டு நேரத்தில்
கடைசியில் மிஞ்சுவது இதுதான்
விளக்கம் - கடைக்கூட்டு----அந்திம சமயம்
ஆதாரம்; ; தமிழ் அகராதி
சரஸ்வதி ராசேந்திரன்

தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 3--12--16 நாளாம் போட்டி

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 3--12--16 நாளாம் போட்டி கவிதையின் தலைப்பு #உள்ளம்_எட்டிப்_பார்க்கிறது வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதி ராசேந்திரன்அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகி_கவிதாயினி_கவிஇமையம்_உஷாராணி நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உள்ளம் எட்டிப்பார்க்கிறது என் கள்ள ம னத்தை படிக்கின்றது
உ ன்னத செயல் நீ செய்தாயா
உள்ளம் வருந்தி கேட்கிறது
பிறந்தது முதல்
மறந்தும் உலகிற்கு
சிறந்தது ஏதும் செய்தாயா நல்லதையெல்லாம்
துறந்து விட்டாயா
பெற்ற தந்தையை
பிச்சை எடுக்க வைத்தாய்
கட்டிய தாரத்தை
பட்டினி போட்டாய்
தாயை தவிக்கவிட்டு
தாரத்தின் பிடியில் கிடந்தாய்
கூடப் பிறந்தவனையே
நீதிமன்றத்துக்கு இழுத்தாய்
நாட்டிற்காவது நல்லது செய்தாயா
மரங்களை வெட்டி கடத்தினாய்
உரமாய் இருந்து தீவிரவாதத்தை வளர்த்தாய்
வட்டிக்கு விட்டு ஏட்டிக்கு போட்டியாய்
பெட்டி பெட்டியாய் பணம் குவித்தாய் போதும்
உள்ளம் எட்டி பார்க்கிறது
உள்ளதை சொல் என்று கேட்கிறது
உறக்கம் கலைந்து இனியாவது நல்லது செய்
சரஸ்வதி ராசேந்திரன்

சங்கத் துமிழ் கவிதைப் பூங்காவில் 28/12/2016ம் நாள்=காதல் கவிதை

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் துமிழ் கவிதைப் பூங்காவில்
28/12/2016ம் நாள் நடைபெற்ற
காதல் கவிதைப் போட்டியில்
கவிதை எழுதிய [சரஸ்வதி ராசேந்திரன் ]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிச்சிற்பி
சரோஜினி பாண்டியராஜன்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
*********************************
தீரா காதலிது
தீஞ்சுவை இனிமை அது
அச்சுறுத்தலால் அடங்காதது
நிச்சயிக்கா விட்டாலும்
நிலையானது
உண்மை நிற காதலிது
உன்னத காதலிது
முள்ளானாலும் மலரும்
கல்லானாலும் கனியும்
எதிர்ப்புகளைக் கண்டு
எள்ளளவும் பயம் காணா
தடி கொண்டு தாக்கினாலும்
தடம் மாறி போகா
அரும்பிய காதல்
அழகிய பூக்கள்
மலராய் மலர்ந்து
நிலவாய் குளிர்ந்து
நலமாய் மனதில்
உலவிடும் காதல்
புத்தம் புதிதாய்
நித்தம் வருவாய்
சித்தம் கவர்ந்திட
தித்திக்கும் காதல்
ஆடும் மயிலாய்
பாடும் குயிலாய்
சூடும் பூவாய் கூடும் காதலே
தேனாய் இனிக்கும்
சரஸ்வதி ராசேந்திரன்

புதன், 8 மார்ச், 2017

6-3-2017 சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா --களத்து மேட்டி ல்காத்திருக்கேன்


இனிய இரவு வணக்கம் கவி உறவுகளே..
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
06/03/2017 அன்று நடந்து முடிந்த களத்து மேட்டில் காத்திருக்கேன் எனும் தலைப்பில் கிராமியக் கவிதைப் போட்டியில் கவிதை எழுதிய கவிஞர் Saraswathi Rajendran அவர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார். கவிதை எழுதிய அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் பிரிதிவிராஜ் லோஜி அவர்களுக்கும் வாழ்த்துகள் .
தலைமை நிர்வாகி ந. பாண்டியராஜன்
மற்றும் பொறுப்பாளர்களுடன்
சுமதி சங்கர்
கிராமிய சிறப்புசான்றிதழ்—6-3-2017
களத்து மேட்டில்காத்திருக்கேன்
களத்து மேட்டில் காத்திருக்கேன் கண்ணம்மா
உளம் திறந்து ஒடி வாடி என் செல்லம்மா
அஞ்சு வயசிலிருந்து உன்னை அறிவேன் செல்லம்மா
கஞ்சி கலையம் சுமந்து வாடி கண்ணம்மா
சின்ன வயசு முதல் உன்னை நினைச்சு வாழறேன்
என்னை நினைக்க உனக்கு நேரமில்லையா சொல்லடி
மணப்பாறை முறுக்கு உனக்கு பிடிக்குமுன்னு
மனதாரவாங்கி வந்திருக்கேன் வாடிப்புள்ளே சீக்கிரம்
ஆத்தூரு சந்தைக்கு உன்னை நானும்
அழகாக வண்டி பூட்டி அழைச்சுப்போறேன்
முட்டாயி தேன் குழலும் மட்டுமல்ல
முறுக்கு லட்டுப் பூவந்தியும் வாங்கித்தாரேன்
சட்டுன்னு சொல்லிப்போடு உன் சம்மதத்தை
கட்டுவேன் தங்கத்தாலே தாலி உன் கழுத்தில்
களத்து மேட்டில் காத்திருக்கேன் கண்ணம்மா
காத்திருக்க வைக்காம கட்டழகி விரைந்து வா
சரஸ்வதிராசேந்திரன்

சஙத்தமிழ் கவிதைப்பூங்கா--ஆசையோடு காத்திருக்கேன்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
22/02/2017 நாள் நடந்து முடிந்த ஆசையோடு காத்திருக்கேன் எனும் தலைப்பில் கிராமியக் கவிதைப் போட்டியில் 
கவிதை எழுதிய
கவிஞர் [சரஸ்வதி ராசேந்திரன் ]
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் சுமதி சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன்