அகத்தியமும் அருந்தமிழும்
ஏகமாய் நிற்கும் இனிதருள் ஆட்சி
ஆகும்நற் காட்சிக்கு அருந்தமிழே சாட்சி
ஆகமங்கள் கூறும் அருள்பூ மணங்கமழும்
தேவாரத் திருத்தமிழ் தித்திக்கும் அருந்தமிழ்
மூவாத முத்தமிழ் மொழிகளுக்குள் மூத்தமொழி
அத்தனையும் அழகோசை அமுதமெனும் தமிழோசை
அமுதூறும் பாக்களினால் அருந்தமிழிலில் பாடுவமே
தமிழ்தெய்வம் தான்படைக்கும் தெய்வீக நூல்கள்
அமிழ்தம் பொழியும் இலக்கணச் சாரலழகை
முழுமையாய் சூழலகை ஆள்கின்ற மொழியாக்கி
செழுமை ஆக்குவதே செந்தமிழுக்கு சிறப்பு
சரஸ்வதிராசேந்திரன் See Less
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக