பத்திரகிரியார்
******************
பத்திரகிரியார்
பட்டினத்தாரின் சித்தருமைத்
தெரிந்த கணமே
அவரின் சீடராகி
பதினெண் சித்தரில்
ஒருவராகப் போற்றப்பட்டார்
மாகாளேஸ்வரை வணங்கி
ஊருக்கு வெளியேயுள்ள
பிள்ளையார் கோவிலுக்குச்
சென்ற பட்டினத்தார்
தியானத்தில் ஆழ்நதிருக்க
அரண்மனையில்கொள்ளையிட்ட
ஒரு முத்து மாலையை
கள்வனவன்
பிள்ளையாருக்கு
காணிக்கையாக்கதூக்கியெறிய
தியானத்தில் இருந்த
பட்டினத்தார் கழுத்தில்விழ
கள்வனைத் தேடி வந்த
வீரர்கள் பட்டினத்தார்
கழுத்தில் கிடந்தமாலைகண்டு
அவர்தான் கள்வனென
அரசரிடம் கொண்டு நிறுத்த
ஆராயாத அரசர்பத்திரகிரியாரை
கழுவிலேற்ற ஆணையிட
பட்டினத்தாரோ பாட்லொன்றுபாட
கழுமரம் தீப்பற்றியெறிய
அந்த கணமே ஞானம்பெற்ற
பத்திரகியார்அரசபோகங்களை
துறந்து துறவியானார்
பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்
திருவிடைமருதூரில் அமர்ந்த்து
நாடோறும் வாங்கும் பிச்சையை
குருவாம் பட்டினத்தாருக்கு
அமுதாக்கி மிச்சத்தை
நாய்க்கும் ஈய வருமீசன்
குருமூலம் சம்சாரிதானே
என்ன திருவோட்டை நாய்மீது
குறிபார்த்து வீச அதுவே
காசிராசன் மகளாகஉருமாறி
பத்திரகிரியார் நோக்கி ஓடிவர
முக்தியினை உடன் சேர்ந்தார்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக