வெள்ளி, 10 மார்ச், 2023

இன்பம். 100 மறுகின் மறுகும் மருண்டு

 குறள் மொழி

இன்பம். 100
மறுகின் மறுகும் மருண்டு
மெத்தையிலே அவனிருக்க
நித்திரையை நான் மறக்க
நித்திரையை மறந்ததால்
நீலவிழிதான் சிவக்க
முத்திரையைப் பதித்தான்
மூடிய இதழில்
துயிலாது துய்த்துக் கிடந்தோம்
இரவுமுழுதும்
தலைவனின் பிரிவால்
தத்தளித்தாள் தரைமீனாய்
காம ‌நெருப்பேற்றி
விட்டான் தொட்டணைத்தே
மதமேறி நிலைமாறும் களிறு
ஆக்கிவிட்டான்
மதுவினும். கள்ளினும்
காமம் வலிமிக பெற்றது
உணர்ந்தேன்
சதையில் உடம்பும்
சதிசெய் மனமும்
புதைந்து சடலமாய்
கிடக்குதிங்கே துயிலின்றி
இணையொடு இணைந்ததை
அணைபோட்ட நாணத்தால்
சுமத்தும் பழியால்
இக்காமம் மயங்கி
தெருவெல்லாம் சுற்றிச் சுழலுது
ஊரால்
ஊர் சிரித்து
உலகம் பழித்தாலும்
காதலித்த காதலனை
கைபிடிப்பேன் நானும்
உண்மை கண்டு
நாணும் ஊர்தான்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Admin
Saraswathi Rajendran முதற் பத்தி
'நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க புலமைப்பித்தன் வரிகளை ஞாபகப் படுத்துகிறது;!
'துயிலாது துய்த்துக் கிடந்தது ' அழகு!
அடுத்து வரும் மூன்று பத்திகளும் அழகு!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக