ஞாயிறு, 12 மார்ச், 2023

திருவெம்பாவை

திருவெம்பாவை
வாழப் பிறந்த வளமார் உயிரினம்
வாழையடி வாழையாக உயர்வாக்கி வைக்கும்
உயர்ஞானப் பேறு அரிதென்று அடியார்கள்
உவந்து சிறந்தேஉண்ணாமலையானை தொழுது
இளமை பருவம் முதுமை இம்மூன்றும்
வளப்பம் காண வரமே வாய்ப்பாய்
வாதவூரார் அருளிய திருவெம்பாவை பாடுவது
பிறப்பழிய வித்தாக காட்டிய வழியாகும்
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
அண்ணா மலையானை அதிகாலை எழுந்து
நீராடி நன்னீர ணிந்து தோழிமார்
நாங்கள் அவன் துதியைப் பாடும்
பாட்டொலி உன் செவியில் விழாதவாறு
பட்டுத்துணி போர்த்தி பாங்காய் உறங்குகிறாயே
ஈதென்ன பேருறக்கம் எழுவாய் என் தோழி
செவிப்பறையில் நுழைய வில்லையோ பாட்டு
எங்கள் பாட்டொலிக் கேட்டு வீதியில்
நடந்தவள் விம்மி அழுது வேண்டுகிறாள்
வீடு தேடிவரும் மகாதேவனைக் காண
விழையாது உறங்குவது நியாயமா எழுந்திரு
வாவியுள் நீராடி கூத்தனை வணங்குவோம்
என்னடி கேலி பேசுகிறீர் அயர்ந்திட்டேன்
அயர்ந்தாலும் கனவில் அந்த முக்கண்ணனை
உயர்ந்தே இருக்கும் சிவகாமி நாதனை’
இமைப் பொழுதும் நீங்கா சிவனை
இடையறாது நினைத்தே போற்றுகிற நானா
மறப்பேன் வாருங்கள் பாடிப் புகழ்வோம்
மார்கழி நீராடி உண்ணாமுலையை வணங்குவோம்
நோற்றிடும் நோன்புகள் நுட்பம் செயற்படுத்தும்
நற்றிறம் நன்மை தந்து வாழ்த்திடும்
இறைநெறி வாழ்க்கையில் எல்லாம் நிகழும்
அருட்பெரும் சோதியை அகமகிழப் பாடி
அவனது மலரடி போற்றிப் பாடேலோரெம்பாவாய்
சரஸ்வதிராசேந்திரன் See Less
May be an image of text that says 'ရင်တောင်အု််လ இச்ககிம்ப்பிருந் தவ்னம் காவியக் காவியக்களஞ்சிய களஞ்சியய் திருவெம்பாவை 16.12.2020 26.12.2020 சிறப்பு வெற்றியாளர் சான்றிதழ் கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்குவழங்கிமகிழ்கிறோம் அவர்களுக்கு ளுக்கு வழங்கி மகிழ்கிறோம்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக