வெள்ளி, 10 மார்ச், 2023

இடைக்காட்டு சித்தர்

 இடைக்காட்டு சித்தர்

இடைக்காடு எனும்ஊரில்
இடையர் குலத்தில் பிறந்தவர்
இடைக்காட்டு சித்தர்
ஆயர்குலத்தில் பிறந்தனால்
ஆடுகளை மேய்த்துவந்தார்
ஏழையுள் ஏழையாய்
ஏழ்மைதன் தோழனாய்
எழுத்தறிவு இல்லாஇடைக்காடர்
சிந்தை ஒடுங்கியவராய்
சிவயோக நிலையில்
கொம்பைஊன்றிக்கொண்டு
இறை நெறியில் ஒன்றி
இரண்டறக் கலந்து நிற்க
வான் வழியில் வந்த
நவயோக சித்தர் போகர்
அவரின் பக்தியைக் கண்டு
வைத்தியம் மருத்துவம்
சோதிடம் ஞானம் யோகம்
அருளிச்சென்றார்
சோதிடத்தில் முக்காலமும்
உணர்ந்ததால் பஞ்சம் போக்க
ஆடுகளை நோயின்றி காக்க
எருக்கமிலை உண்ணக் கொடுத்தார்
வரகரிசி கஞ்சியும் ஆட்டுப்பாலும்
அருந்தி உயிர் வாழ்ந்தார்
நவக் கிரகங்களை
நயமாக வரவழைத்து
வரகரிசிக் கஞ்சியும்
ஆட்டுப்பாலும் கொடுக்க
விருந்துண்ட மயக்கத்தில்
உறங்கி கிடக்க
கிரகங்களை மாற்றி வைத்து
வியாழனை நிறுத்தினார்
பஞ்சமும் பசியும் பறந்து போனது
கொட்டும் மழை பொழிய வைத்து
குவலயத்தைக் காத்தார்
மதியாத மன்னனின்
சித்தத்தை சுத்திசெய்தார்
கற்றூணைப் போல்மனத்தைக் காட்டு மயிலே – வரும்
காலனையும் தூரத்தில் ஓட்டுமயிலே –
மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
கானமாய் ஊதுகுழல் - கோனே
கானமாய் ஊதுகுழல்
சித்தர் பாடல்கள் சிந்தைக்கு விருந்தாம்
உலகே சிவமயம் என முக்தி நெறிகாட்டி
புகழோடும் மாண்போடும்
திருவிடைமருதூரில் சமாதிஆனாரே
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Admin
Saraswathi Rajendran சிந்தை தங்கும் இயல்பு நடையிலோர் எழிற் கவிதை!
பேரழகு வாழ்த்துகள் கவிஞரே!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக