ஓஓ உடைந்ததே என்பீடு
போர்க்களத்தில் பகைவர்களைப்
பந்தாடும் பலசாலியை
வாளொத்த விழிகளால் வலுவிழக்க
பகைமுடிக்க புத்திக் கூர்மையால் வெல்பவனை
முகைவெடிக்கும் முறுவலில் முனைமழுங்க வைத்தவளே
அடங்காத யாருக்கும் தலைவணங்கா
மாவீரனை
மடங்க வைத்து மண்டியிட வைத்தமங்கையே
களம்கண்டு பகைவென்ற கர்வ மறமின்று
வளமை அழகில் நிலைதடுமாறி போனதே
கூரான முலைக்கொம்பு நேராக மோத
வீரத்தில் சிறந்தவன் வலுவிழந்து வசமிழந்தானே
வாளை ஒத்த வேல்விழிகள் கொண்டவள்
காளையென் வீரத்தை வீழ்த்திய கலையழகியே
உடைந்த தென்பீடு திட நெஞ்சமும்
தடம்மாறி பீடிழந்து தஞ்சமானது காமத்தில்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக