ஏழிரண்டு ஆண்டின்வா
******************************
மந்தரையின் போதனையால்
மதியிழந்த கைகேயி
தந்தவாக்கைக் காப்பாற்ற
ஈந்துவிட்டு தசரதனும்
நொந்த மனதுடன்
வீழ்ந்தான் மரணித்து
பரதன் நாடாள
ராமாநீ காடேகி
ஏழிரண்டு ஆண்டுகள்
கானகம் ஆள்வாய்
மன்னனின் பணிப்புரை
மனதில் கொள்வாய்
கடமையை ஏற்று
கண்ணியம் காவென்றாள்
குறுக்கீடு செய்து
குலைத்திடவில்லை ராமனும்
மறுப்பேதும் சொல்லவில்லை
அருளியது தந்தையென்றால்
அவரது விருப்பத்திற்கு
அடிபணிந்தேன் தாயே
ஆடம்பர ஆடைகளைந்து
காவியுடை தரித்து
கானகம் புறப்பட்டான்
கண்ணிய ராமனும்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக