ஞாயிறு, 22 அக்டோபர், 2017

வேட்டை இத22=10-17

வேட்டை இதழ் 22-10-2017

கம்பன் கவிக்கூடம்


அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
வெற்றியாளர்களின் சான்றிதழ்களை பதிவிடுவதில் பெருமைகொள்கிறோம.
அன்புடன்
கம்பன் கவிக்கூடம் நிர்வாகிகள் .

நதியோர நாணல்கள் 1=10-17-பாசத்தின் விளைனிலங்கள்

சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட #பாசத்தின்_விளைநிலங்கள் எனும் தலைப்பில் இடம் பெற்ற சிறப்பு கவிதைப் போட்டியில் பங்கு கொண்டு #பாசத்தின்_துளிர்கள் எனும் சிறப்புச் சான்றதழைப் பெறும் கவிஞர்கள் விபரமும் சான்றதழ்களும்.
பாசத்தின் விளை நிலங்கள்
கோடி கோடியாய் குவித்தாலும்
குதூகலம் கிடைக்காது குழந்தைகள்
இல்லாத வீட்டில்
கூடுகின்ற சுற்றங்கள் இருந்தாலும்
கொஞ்சிக்குலவ குழந்தையில்லா வீடு
வெற்றுக் கூடு
பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
போற்றும் கல்வியைத் தராவிட்டால் ஏது சீரு ?
ஆன்றோர் போற்ற அறிவைத் தந்து
சான்றோனாக்குவதே பெற்றோர் கடமை
சிறு வயதிலேயே சிந்திக்க கற்றுத்தரவேண்டும்
செயல் முறை கல்வியைத்தரவேண்டும்
இன்றைய பிள்ளைகள் நாளைய குடிமக்கள்
ஈன்றவர்கள் அதை மனதில் நிறுத்தி
நற்செயல் உள்ளவனாக ஆக்கவே
நாள்தோறும் கவனம் கொள்ளவேண்டும்
பெற்று வளர்த்து பெயரும் இட்டு மகன்
பெருமையடைய நாளும் உழைத்தவர்களுக்கு
கல்வி கேள்விகளில் சிறந்தவனாய் ஆகி
கைம்மாறாய் முதியோர் இல்லத்தில் விடாதுஇருக்கவேண்டும்
பாசத்தின் விளை நிலங்கள்

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--4-10=17=என் விழி வழியே ஏன் நுழைந்தாய்


சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய .04/10/2017 அன்று நடந்து முடிந்த காதல்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்கள் ஈழவன் தாசன்
Kamala Saraswathi K
Nirmala Sivarajasingam
சரஸ்வதி ராசேந்திரன்
அவர்களுக்கு காதல் நாயகன் நாயகி சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் . Sukhumar Thiagarajan
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

தமிழமுதுகவிச்சார10=10=17==விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே

இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
****
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 10/10/17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_விழியே_கதை_எழுது_கண்ணீரில்_எழுதாதே
வெற்றிச் சான்றிதழ் பெறுபவர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன்அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துகளும்
#நிர்வாகி_கவிதாயினி_கவிஇமயம்_உஷாராணி அவர்கள் நடுவராக தலைமையேற்று சிறப்பான கவிதைகளை தேர்வு செய்தமைக்கு அவருக்கு நன்றிகளும் வாழ்த்தும்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

வேட்டை அக்டோபர் 15-2017

வேட்டை இதழில் என் கவிதை 15-10-2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா-- 28-9-17--படப்போட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் 28/09/2017ம் நடத்திய படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் Misrul Sareena
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
வறுமையிலும் நேர்மையுடன்
பிழையில்லா பிழைப்பொன்றே
பெருமையாய் எண்ணி சுமைசுமக்க
கைவண்டி இழுக்கிறார்
வஞ்சித்து வாழ்வதை விரும்பாமல்
கெஞ்சுவதை கேவலமாய் எண்ணி
உழைத்து வாழவேண்டும் பிறர்
உழைப்பில் வாழ விரும்பாததால்
ஒட்டுமொத்த குடும்ப சுமையையும்
தன்கையே தனக்குதவி யென
தன்னம்பிக்கையுடன் பசி தீர்க்கிறான்
வலிமையைத் தோளிலே பூட்டு பசி
வயிறார உண்ணவே உன் கரம் நீட்டு
தளர்வையே தனியாக ஓட்டு என
தன்னம்பிக்கையோடு உழைத்து
தனித்துவமாய் வாழுகி்றான்

13-8-17-சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--வஞ்சிமகள் வாய் திறவாய்

கொலுசு இதழ் -அக்டோபர் 2017

கொலுசி அக்டோபர் இதழில்

ஒரு ஹைக்கூவும் ஒருகோப்பைத் தேனீரும்


சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா -17-9-17--விழியே மனதின் கதவாக

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் 17/09/2017ம் நடத்திய விழியே மனதின் கதவாக எனும் தலைப்பில் காதல் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர். நிலாச் சந்தர் . ந. பாண்டியராஜன்
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
விழியே மனதின் கதவாக
வழியே நுழைந்தேன் பதமாக
பொழிவாய் காதலை இதமாக
மொழியாய் ஏற்பேன் வேதமாக
தீயாக உன் நினைவு எரிக்கிறது தேகத்தை
நீராக வந்து அணைத்து விடு தாகத்தை
எழிலாகவந்து நீ போகிறாய் மேகமாய்
என்னவளே மோகம் தீர வந்திவிடு வேகமாய்
தேன்பாயும் சோலைஇளம் தென்றல் வேளை
மான் போல துள்ளி மயக்குறியே தன்னாலே
கண்ணே நீ ஓடி விளையாட வாராய்
பண்பாடி ஜோடி கிளிகளாய் பறப்போம்
தூங்காத கண்களால் தினமும் உன்னை
நீங்காமல் உன்னையே காண்கிறேன் நானே
தாங்காது இனியும் என் மனது பெண்ணே
ஏங்க வைத்து என் உயிர்போக்கி பழி ஏற்காதே
விழிதானே மனதின் கதவு
விழிவழியே வந்து உதவு
ஓரவிழியாலே சாய்த்துவிட்டு என்னை
ஒருவழி பாதையென்று சொல்லி நீக்கிடாதே
சரஸ்வதிராசேந்திரன்

அக்டோபர் காற்று வெளி--2017

அக்டோபர் காற்று வெளி இதழில் என் கவிதை

படக்கவிதை ==சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா-21-9-17

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம்21/09/2017ம் நடத்திய .
படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் . சேகுஇஸ்மாயில் முகம்மது மஸ்ஊத்
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆனைக்கட்டி போரடித்த
காலமொன்று உண்டு
அரசவையிலும் கூட
ஆனைப்படை உண்டு
ஆனைப்படையெல்லாம் இன்று
பூனைப்படையாக மாறிப்போச்சு
இலங்கையிலே துப்பாக்கிச் சூட்டுக்கு
இலக்காகி இறந்துபட்ட தன் இனத்துக்காக
இங்கே சங்கிலி போராட்டம் நடக்குதோ? இல்லை
அரசியல்வாதியின் வருகைக்காக நடக்கும்
அணிவகுப்போ ? யாரறிவார் ?ஆனாலும்
ஆனைப்படையை அதிசயமாய் பார்ப்பார் அனைவருமே