வெள்ளி, 10 மார்ச், 2023

குறள்மொழி ★ °இன்பம் ° (98) #காமமும்_நாணும்_நோனா_உடம்பு

 குறள்மொழி ★

தூரமாய் சென்றான்அவனும் பொருளீட்ட
பாரம் அழுத்துகிறது பிரிவின் தாக்கத்தால்
சாரம் இன்றி சரீரம் தேயுது
நாணமோ தடுக்குது அவரிடம் புலம்ப
கடமை முடிந்து கடுகி வரவில்லை
காதலி படும் வேதனையும் அறியவில்லை
சோதனை நீக்கிச் சுகத்தினைத் தேக்கிட
சுடுகின்ற தீங்கெனும் நோய் தீர்க்கவரவில்லை
ஊற்றுநீராய்ப் பொங்கி வழிகிறது நோய்
உண்டாக்கிய அவரிடம் சொல்ல வெட்கமாகுதே
காமமும் வெட்கமும் அடங்காமல் கிளர்ந்தெழுந்து
இருதலைக் கொள்ளி எறும்பாய் துடிக்கிறேன்
ஊரெல்லாம் தூங்கும்போது என்னுள்ளம் மட்டும்
உறங்காமல் என்னைப் படுத்துதே தோழி
துணை இல்லா இரவு கொடுமைதானே
காமக் கடலை நீந்த முடியாமல்
கசிந்துருகித் தவிக்கிறேன் இரவு முழுதும்
நான் படும் வேதனையை துன்பத்தை
நாவினாலும் சொல்ல முடியாமல் அவரிடம்
நாணம் தடுக்கிறது நல்லுடலும் சுடுகிறதே
சரஸ்வதிராசேந்திரன்
கவிதைச் சிறுவன்
Saraswathi Rajendran நல்ல கவிதை நல்ல வரிகள்
தூரமாக சென்ற அவரால் பாரம் அழுத்துகிறது பிரிவின் தாக்கத்தால்
என்று துவங்கி கவிதையில் ஒவ்வொரு வரிகளிலும் வெட்கமும் நாணமும் தன்னை ஆட்கொண்டு வெளியே சொல்ல முடியாத காம நோய் தன்னை முழுவதுமாக தின்று தீர்க்கிறது என்று எழுதிய கவிவரிகள் நன்று கவியே
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக