வெள்ளி, 10 மார்ச், 2023

சாதி இலார் தரு சேயே

 சாதி இலார் தரு சேயே

நிலவளமும் நீர்வளமும் நிறைந்த திருவையாறு
என்னு மொரு திருத்தலத்தில் வீற்றிருக்கும் குருவான சுப்ரமணியனை கைகூப்பி வணங்கியே.
மருள்நீங்கி மருகனின் அருளால் உருவாக்கிய
அருணகிரி நாதருக்கு அறிமுகம் தந்தநூலாம்.
கார்மேக வண்ணன் ஆனிரை மேய்ப்பவன்
பாம்பணைப் பள்ளியில் துயிலும் பரந்தாமன்
பொன்னிற மேனியனாய் போர்க்குணத்தா னிரணியணை
கொன்றாய் மார்பினை வகுந்தே நரசிம்மனாய்
பத்துத்தலை இராவணனுடன் போர் தொடுத்து
கொத்தாக ஒரே பாணத்தில் வீழ்த்தியவனும்
வாலியெனும் குரங்கை சினத்தால் அழித்தவனும்
கருணாகரனும் ஆன திருமாலின் மருமகனும்
திரிபுர தகனம் எரித்து தேவிக்கு தேகத்தில்
பாதி ஈந்தே சாதியேஇல்லா மறையவனாம்
பரமேசுவரனின் மகனே அஞ்ஞானம் அகற்றும்
வீரசூரியனே வேலெடுத்து வில்லேந்தும் வேலனே
அப்பனுக் கருமுறை சொன்ன சுப்பனே
அருணகிரிக்கு அருளிய அழகனே ஆண்டவனே
அறுபடை வீடு கொண்டேனே ஆறுமுகனே
திருவை யாற்றில் வீற்றிருக்கும் வீரத்திருமகனே
தாமரைப் பொய்கையனே தமிழ்மறைக்கு மெய்யனே
தண்டபாணி தெய்வமே தாள்தொழுகை செய்வமே
சேமமுற வந்திடுவாய் சேவற்கொடி யழகா
நாமணக்கப் பாடுகிறோம் விரைவாய் வேலனே
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக