ஆய் அரண்டிரன்
பொதிகை மலையில்
பிறந்த கொடையாளன்
ஆய் கடையெழு
வள்ளல்களில் ஒருவன்
ஆயர்குல மன்னன்
வேள் ஆயின்
ஈகை போற்றி
ஈண்டு இங்கே
காண்போம் வாரீர்
அறநிலை வணிகனல்ல
ஆய் அரண்டின்
நற்செயல் புரிவதை
நாளும் கடைபிடிப்பவன்
வீரமும் ஈரமும்
விரலிடைக் கொண்டவன்
ஆன்றோர் வழிநெறியில்
சான்றோனாய்த் திகழ்ந்தவன்
நாகம் தந்த
ஒளிமிகு ஆடையை
ஈசனுக்கு நல்கி
கொடையில் சிறந்தான்
கொள்கையில் நின்றான்
உறையூர் முடமோசியாரும்
துறையூர் ஓடைக் கிழாரும்
புறநானூறில் பதித்துள்ளனரே
ஆய் அரண்டின் புகழை
தோய்ந்து நாமும் தொழுவோமே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக