மெளனம் மெளனம் மெளனம்
ஆறுமாதமாய் அது
பட்ட வலியும் வேதனையும்
உடமை உடையவர்கள்
கடமைக்காக கூட
எட்டிப் பார்க்கவில்லை
வீழ்ந்தது கேட்டதும்
வீழ்ந்து கிடக்காமல்
பறந்து வந்தனர்
சாய்ந்ததை எடுக்காமல்
மாய்ந்து மாய்ந்து
அள்ளினர் அடிதடி
சண்டையுடன் தொகையையும்
நகையையும்
எல்லாம் முடிந்தது
நியாயமா பார்த்தா
இதெல்லாம் உனக்குத்தான்
நீயே உனக்கு வேண்டியதை
எடுத்துக் கொண்டு மீதியை
அவர்களுக்குகொடு
அது வாய் வாரத்தைதான்
வாய்மை அல்ல
அப்பொழுதும் நான்
மெளனமாய்த்தான்
நின்றிருந்தேன்
இதோ இப்பொழுதும்
அவர்கள் என்னைக் கடந்து
போனதையும்
மெளனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஊமையாய் மொழியினறி
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக