உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
குறள்..1263
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
துவண்டது மேனி
கழன்றது வளையல்
உழலுது மனமும்
உன்னுள் உறைந்து
உன்னுடன் கலக்க
என்னுள் தாகம்
என்னை எரிக்குதே
தூரம் குறையவும்
பாரம்தொலையவும்
வாராமல் நிற்பதழகோ
காராக வந்து
காதலைப் பொழிந்து
காதலி தவிப்பைதணிப்பீர்
விரைவில் வருகவே
விரகம் தீர்க்கவே
நரகமாய் இங்கே
நாட்களும் கடக்கிறேன்
வீரத் தலைவனே
விரைந்து வருகவே
பொருளைத் தேடி
அருளுடன் கூடி
திரும்பிடு தலைவா
மாலை வந்தால்
மயங்கி நிற்கிறேன்
வாயிற் புரத்தில் விழி
வைத்துக் காத்திருக்கிறேன்
பிரிவின் தாக்கம்
பெருந்துயர் தருதே
வருவான் என்று
நம்பிக்கையில் நானும்
உயிர் தரிக்கிறேன்தோழி
சரஸ்வதிராசேந்திரன்
Kesavathas
Saraswathi Rajendran
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்
பாடலுக்கான இசையோடு ஒத்து வருவது போல் அமைந்த வரிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன;
உன்னுள் உறைந்து
உன்னுடன் கலக்க
என்னுள் தாகம்
என்னை எரிக்குதே -
தாகம் எரிக்கிறதாம் -அழகு
காராக வந்து காதலைப் பொழி -நல்ல கற்பனை!
அழகான கவிதை!
சிறப்பு வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக