சனி, 11 மார்ச், 2023

மந்தமாருதம் மலைய மாருதம்

 மந்தமாருதம் மலைய மாருதம்

தெற்கிலிருந்து வீசும்
தென்றலெனும் பூங்காற்று
தேமதுர இதக்காற்று
தெவிட்டாத இளங்காற்று
மலையிலிருந்து வீசுவது
மலைய மாருதமாம்
மூலிகை வாசம்வீசி
மெய்குளிர்விக்கும் முனிவரையும்
தென்றலும் வீசிடவே
தேகமது சிலிர்ப்பாகும்
உளச்சூடும் நிலையாகும்
உள்ளமதும் களிப்பாகும்
மந்தமாருதம் வீசிடும்
மன்னவ னைத்தேடும்
பெண்ணின் மனது
பிரியமானவனைக் கூடும்
ஆற்றோரம் நாணலும்
அழகாகத் தலையாட்டும்
மூங்கில் மரக்காடுகளும்
முண்முணுக்கும் இசையை
ஓசையிடும் பூங்காற்று
உணர்வுகளைத் தூண்டிவிடும்
உள்ளக் குமுறலுக்கு
உரமேற்றிவிடும் மலைக்காற்று
மலைய மாருதம்
காலனின் வேலென
கம்பனும் பாடிவைத்தான்
சூர்ப்பனகை காதல் கொந்தளிப்பை
திருத்தொண்டர் புராணத்தில்
திருத்தமாய் சொன்னார்
தென்றல் வீசும் சீதப்
பந்தல் தண்ணீர் அமுதமென
வந்து அனைந்த வாகீசர்
சிந்தை வியப்பு உறவே
மந்தமாருதம் தவழும்
சந்திரன் வானில் திகழும்
கன்னிப்பூவின் கண்ணில்
காதல் ரேகை ஓடும்
வந்து நாசிதொடும் முல்லை
சிந்தை சிலிர்த்தெழச் செய்யும்
பூவில் தேனெடுக்க
பொன்வண்டு பார்த்திருக்கும்
இயற்கை மாருதங்கள்
இறைவனின் செயலாகும்
நினைவு வலைவீசும்
நித்திலத்தில் கலையாகும்
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Admin
Saraswathi Rajendran ஆகா
இராமாயணம்,
திருத்தொண்டர் புராணம் என
அத்தனையையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்... சிறப்பு கவிஞரே.
இயற்கை மாருதங்கள்
இறைவனின் செயலாகும் - உண்மைதான் கவிஞரே.
வாழ்த்துகள்.
Boost this post to reach up to 293 more people if you

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக