புத்தனின் சாயல்
வேர்பதிந்த ஆணிவேராய்
வேரூன்றி நிற்கிறது.
போதை ஆசை.
விதைத்த விதையாய்
கூர்மையுள் கூர்மையாகி
கூராகும் சொற்கள்.
இணைத்துப்
பிணைத்தவர் சொற்களில்
. கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
ஒருகன்னத்தில்
அடித்தால்
இன்னொரு
கன்னத்தை காட்டு.
யுகங்களாய்த்
தொடர்வதும் இதுதானே!
எல்லாம் முடிந்தது.
சமாதி அடைந்தால்
சகலமும்
ஒன்றென அமைக்கும்
அமைதி அது.
வீடே
வெறுமையாக
சலனமின்றி கிடந்த
அவனில்
புத்தனின் சாயல்
சரஸ்வதிராசேந்திரன்
Keshavadas
Saraswathi Rajendran வித்தியாசமான கற்பனை!
கவிதையை விஞ்சி நிற்கிறது துணிந்தெடுத்தக் கவிதைப் பொருள்!
வாழ்த்துகள் கவிஞரே!
நனி சிறப்பு ஒ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக