சோழன் கிள்ளி வளவன்
சிறந்த போர் வீரனாம் தானென்ற
செருக்கும் உடைய சோழன் கிள்ளிவளவன்
இருப்பினும் செறிவுடன் ஆண்டான் நாட்டை
உறையூரை மையமாய்க்
கொண்டு
குறைகளின்றி அரசாண்டவன்
வலிமைமிக்க படையுடையான்
வெற்றியொன்றே இலக்குடையான்
போர்கள் பலபுரிந்தாலும் புலவர்கள் பலரை
போற்றி எளியர் பலரை ஆதரித்தவன்
முத்தமிழை ஆதரித்தவன் வெற்றிகளைக் குவித்தவன்
இவன் இத்தன்மையனாக இருந்தமை யாற்றான்
புலவர் ஒன்பதின்மர் பாடும் பேற்றைப் பெற்றான்,
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று
இறந்த பின்னும் புலவர்களால் பாடப்பெற்றவன்
இரவலர்கள் எல்லாம் வளவனின் இழப்பால்
வருந்தியே அழுதிட வையகமும் வாடியது
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக