மார்கழியும் மாதவன் அருளும்
______________________________________
வாவியில் நீராடி
வாசலில் கோலமிட்டு
வணங்கிட வாசுதேவனை
விரைந்திடுவார் மலர்களோடு
பனியில் ஆடவர்கள்
பசனைப் பாடல்களைப்
பாடியே வீதிகளைக்கடந்து
பரந்தாமன் சந்நதி வருவர்
வெண்பட்டுடுத்தி
வேணுகோபாலனங்கே
புன்னகையோடு காட்சிதர
பூரிக்கும் மனதும்
பாவையர் நோன்பேற்று
பாவங்கள் கரைந்தோட
பாற்கடல் பள்ளிக்கொண்ட
பார்த்தசாரதியின் பாதம்பணிவர்
உலகை அளந்த
உத்தமன் பேர்பாடி
கோவிந்த நாமத்தைகுரலெழுப்பி குதூகலமடைவோம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக