செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழ்த்தேர் கண்ணதாசன் பாடல் கட்டுரை

யாரை எங்கே வைப்பது என்று  யாருக்கும் தெரியலே.....
 
கனி  பிழிந்த சாரங்களால்  காதல் கவிதைகள்   தந்தாய்
நனி   சிறந்த  சாரங்களால்  குழந்தைகளுக்கும் பாடல் தந்தாய்
தத்துவச்சாரங்களில்       தேன் கலந்து பாடிய வித்தகன்  நீ
அரசியல்   சுய நலமிகளின்   உண்மைகளை தைரியமாய்
நகைச்சுவை கலந்து  நயமாய்   பாடியவனும்   நீ
உன் பாடல்களை   கேட்க  கேட்க  படிக்க படிக்க 
நெஞ்சச்  சுவரினிலே   சொந்தங்களாய் ஒட்டிக்கொள்ளும்
மந்திரம்தான் என்னவோ தந்திரம்தான்  என்னவோ?
கரு படு  பொருளை உருப்பட வைப்பவந்தான் உயர் கவிஞன்
என்ற  உன்  வரிகளை  உனக்குள் பொருத்தி ப்பார்க்கிறோம்
உள்ளோன்று வைத்து  புறம் ஒன்று   பேசாதவன்  நீ அதனால்
தள்ள முடியாது உன்   கருத்துக்களை அள்ளி திளைத்தோம்
பாட்டினிலே  உன்னை    மிஞ்ச  எவரும் பிறக்கவில்லை
  நாட்டினிலே   உன் பாட்டுக்கு ஈடாக  எதுவுமில்லை
யாரை எங்கே வைப்பது என்று யாரூக்கும் தெரியலே  ஆனால்
மக்களுக்குத்தெரியும்  அனுபவக்கடலிலே   முத்தையா
 மூழ்கி எடுத்த அத்தனை  முத்துக்களும் அருமை என்று

தமிழ்த்தேர் -கட்டுரை--மே 2

பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் ஏட்டில் சிறப்புறும் இலக்கியமாக இன்றும் விளங்குகின்றன,அவ்ருடைய பாடல்கள் எளிமையானவை
சமுதாய மறுமலர்ச்சியைஏற்படுத்துபவை  ,தன்னுடைய சுயமுயற்சியாலும்,தெளிவாலும் கருத்தாழமிக்க பாடல்களைத்தந்து திரைஉலகில் ஒரு உன்னத   நிலையை அடைந்தார் ,அவர் குழந்தைகளுக்காக  அருமையான பாடல்கள் தந்தார் 
சின்னபயலே சின்ன பயலே சேதி கேளடா
என்றபாடலில் ,குழந்தைகளை பயமுறுத்தும் பழக்கத்தை சாடியுள்ளார் வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்று ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க  ,வேலையற்ற வீணர்களின். மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே என்றுபாடினார் திருடாதே பாப்பா திருடாதே,தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் தூங்கியவர்களை எழுப்பிய பாடல் அதுமட்டுமா?உழவர்களுக்காக பாடிய பாடல் சிந்தையை கவரும் வகையில் உழவர்களின் துயரத்தை தெளிவு படுத்தியது .,தொழிளாலர்களுக்காக ,  செய்யும் தொழிலே தெய்வம் அந்தத்திறமைதான்  நமது செல்வம்  என்று ஞாபகபடுத்தினார் இதுமட்டுமா  நம்பிக்கை தரும் பாடல்களில் அவ்ர் திறமையை வெளிப்படுத்தினார் ,,காயும் ஒரு நாள் கனியாகும் ந்ம் கனவும் ஒரு  நாள்னினைவாகும் என்று நமக்கு நம்பிக்கை தந்தார்  ஏற்றமுன்னா ஏற்றம் இதிலேயிருக்கு முன்னேற்றம்  தத்துவப்பாடலையும் அவர் விட்டு வைக்கவில்லை ,இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே,   குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா’ மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளேஅவன் ஆடி அட்ங்குவது மண்ணுக்குள்ளே,குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளன்  நரிகொன்றுவிடும் என்றும் பாடியுள்ளார் ,,அவரது பாடல்களை கேட்க்காத காதுகள் இல்லை, வாழ்த்தாத வாயும் இல்லை.இன்று அவர் இருந்திருந்தால்  இன்றைய சூழலுக்கு இன்னும் கருத்தாழமிக்க பாடல்கள் பல தந்திருப்பார்,காலன் அவரை சின்ன வய்திலேயே கொண்டு சென்றது திரை, உலகிற்கு மாபெரும் இழப்பு ,அப்படிப்பட்ட பாடல்களை எழுத பட்டுக்கோட்டையாரை விட்டால் யாரிருக்கிறார்கள். பட்டுக்கோட்டையாரின்           பாடல்களில்என் ஞாபகத்திற்குஎட்டியது வரை எழுதிவிட்டேன்  இன்னும் பலபாடல்கள் உள்ளன,

சரஸ்வதி ராசேந்திரந்--மன்னார்குடி 

சனி, 1 ஆகஸ்ட், 2015

தடாகம் இலக்கிய வட்டம்

ஜூலை மாதப் போட்டிக்கவிதை
20-பொறாமை
பொறாமை என்பது என்ன?
இயலாத வர்களுக்கும்
முயலாத வர்களுக்குமே
வரும் ஒரு உணர்ச்சி
போறாத நல்ல குணங்களால் வருவதே
பொறாமை என்னும் தீ-அது
பற்ற வைப்பவர்களையே
பற்றித் தீய்க்கும் நெருப்பு
பொல்லாத குணங்களில் ஒன்று அது
பொறாமை என்றால் மிகையன்று
அடுத்தவர் வாழ்ந்தால் பொறுக்காது
தடுத்திடவே அது நாளும் முயலும்
பொறாமை என்றொரு குணமிருந்தால்
புறம் தள்ளி வாழ்ந்திடக் கற்றுக்கொள்
தன்னம்பிக்கை இல்லவர்கள்தான்
என்றும் பொறாமை கொள்வார் பிறர் மேல்
மனிதனை வீழ்த்தும் குணங்களில்
முதன்னமை ஆனது பொறாமைதான்
முயன்றால் முடியாதது இல்லையென
முடிவுடன் முயற்சி செய்திடுங்கள்
போட்டி இருக்கலாம் மனிதர்களுக்குள்
பொறாமை மட்டும் கூடவே கூடாது
தீண்டாமையை விட பொல்லாத
வேண்டாம் பொறாமை மனிதர்களே !
உழைத்து முன்னேறும் குணமிருந்தால்
தழைத்து வளருவீர்கள் நிச்சயம்
சரஸ்வதி ராசேந்திரன்