தாலி பாக்கியம்
‘’இதோ பாருங்கம்மா
,இவருக்கு ஹார்ட் மட்டும்தான் ஒட்டிகிட்டு இருக்கு ,இப்ப உடனடியா டயாலிஸ் செய்யணும்
,திருச்சிக்கு கொண்டு போங்க’’டாக்டர் பரஞ்சோதி சொன்னார் .
’என்ன டாக்டர்
சொல்றீங்க ,உங்களை நம்பித்தானே வந்தோம்
‘’மீனா கேட்டாள்
‘’ நீங்க பத்து நாளைக்கு மின்னாடியே கொண்டு வந்திருக்கணும்
லேட்டா வந்திருக்கீங்க எல்லாமே அவுட் அதான் சொல்றேன் உடனடியா திருச்சி கொண்டு போங்க
நான் டாக்டர் மைக்கேலுக்கு லெட்டர் தரேன் ‘’
இத்தனைக்கும் வேணி அழுத்தமாக
இருந்ததை பார்த்து’’அக்கா டாக்டர் சொன்னதை
கேட்டியா ,இனிமேலும் இங்க இருந்து புண்ணியமில்லே
சீக்கிரம் கிளம்புவோமா?’’ ’’இல்லே மீனா ,திருச்சிக்கெல்லாம் போகமூடியாது ,சென்னைக்கு
கிளம்புவோம்’’
‘’னீங்க புரிஞ்சிதான் பேசுறீங்களா
?இந்த கண்டிஷனில் அவ்வளவு தூரம் எல்லாம் போகமுடியாது அப்படியே போனாலும் பாதி வழியிலேயே
திரும்பித்தான் வரணும் சூழ் நிலையை புரிஞ்சுக்கோங்க’’ டாக்டர் உறுதியாகச் சொன்னார்.
சுற்றியிருந்த உறவினர்களுக்கு புரிந்தாலும்
வேணி மட்டும் பிடிவாதமாக
இருந்தாள் .
’’ டாக்டர் ,எனக்கு நீங்க சின்ன ஹெல்ப் பண்ணுங்க,உடனடியா
ஒரு ஆம்புலனஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க மற்றதை
நான் பார்த்துக்கொள்கிறேன் ‘’
‘’என்னக்கா சொல்றே?வீணா,,அவரை
எதற்கு அலைக்கழிக்கணும்?,’’மீனா கேட்டாள்
‘’எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கு அதனால நான் இவரை
சென்னைக்கு கொண்டு போய் டிரீட் மெண்ட் கொடுத்தால்
சரியாகிவிடுவார் .
வேணி சொன்னதுடன் அல்லாமல்
கணவரை ஆம்புலன்ஸில் ஏற்றினாள் சலைன் ஏற்றியபடியே
பேச்சு மூச்சற்று ஏறக்குறைய பிணம் போல்தான் கிடந்தார் விசுவம்
‘’இந்த அம்மா என்ன லூஸா
இத்தனை சொன்னபிறகும் சென்னைக்கு கிளம்பிட்டு எப்படி இருந்தாலும் எட்டு மணி நேரம் ஆகும் சென்னை போக அதுவரை எப்படி தாங்கும்?பிடிவாதமா இருக்கே ‘’டாக்டர் பொறுக்கமுடியாமல் பக்கத்தில்
இருந்தவரிடம் புலம்பினார்
இல்லெ டாக்டர் அந்தாம்மாவுக்கு
கடவுள் பக்தி அதிகம் . என்கணவரை கடவுள் காப்பாத்துவார் என்று சொல்கிறார்கள்ஆன்மீக ஈடுபாடு
அதிகம் .
விசுவம் மிகவும் நேர்மையானவர்
எல்லாவிஷயத்திலுமே கண்டிப்பானவர் சாப்பாடு விஷயத்திலும் கரெக்டானா பேர்வழி
அப்படி இருந்தும் சுகர்
வந்துவிட்டது,அதற்கான மாத்திரைகளைக்கூட ஒழுங்காக எடுத்துக்கொண்டிருந்தார் இருப்பினும்
தீடிரென்று சுகர் கன்னாபின்னாவென்று இறங்கி பேச்சு மூச்சில்லாமல் போய் விட்டார் .
அவர் மனைவி பக்தியோகத்தில்
திளைத்தவள் அவள் மனம் மட்டும் திடமாக நம்பியது கடவுள் தன் கணவரை காப்பாற்றுவார் என்று
சென்னை போனதும் பணத்தை
கட்டி அப்பல்லோவில் அட்மிஷன் போட்டாள் .டாக்டர்கள் ஐந்து பேர் கூடி செக் பண்ணினார்கள்,விசுவத்தின் கண்டிஷன் மோசமாகத்தான் இருக்கிறது ஒன்றும் சொல்லமுடியாது
என்று சொன்னார்கள்
ஆனாலும் வைத்தியத்தை தொடர்ந்தார்கள்
வேணி அங்கிருந்தா பிள்ளையாரிடம்
தஞ்சம் ஆகிவிட்டாள் .அங்கே காசு இறைந்து கொண்டிருந்தது விசுவத்தின் உடலில் எந்த மாற்றமும் இல்லை ,வந்து ஒரு வாரம்
ஒடி விட்டது ‘’என்னக்கா அத்தான் உடல் நிலையில்
எந்த முன்னேற்றமும் தெரியவில்லையே தஞ்சை டாக்டர்
சொன்னதுபோல்..’’ சொன்ன மீனாவை இடை மறித்தாள்வேணி
‘’எனக்கு நம்பிக்கை இருக்கு
அவர் பிழைத்துக்கொள்வார் ,என் உள்ளுணர்வு சொல்கிறது அவர் எழுந்து விடுவார் ‘’
‘’ஏன்க்கா மருத்துவர்களை
கடவுளாக சொல்வார்கள் அவர்களாலேயே ஒன்றும் சொல்ல முடியவில்லை நீ என்னடா வென்றால் உள்ளணர்வு
சொல்கிறது என்கிறாய் கடவுள் காப்பார் என்கிறாய்’’
மீனா கிண்டலாக கேட்டாள்
கடவுளின் கையது தொடுவது
உண்டெனின் நடவாதனைத்தும் நடக்கும் மீனா ,அன்று துச்சாதன் பாஞ்சாலியின் வஸ்திரத்தை உருவும்போது
கண்ணன் வந்து காப்பாற்றவில்லையா? ஏன் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவானை காப்பாற்றவில்லையா/இதெல்லாம்
எப்படி நடந்தது ? ஆன்மீக பலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும் . நம் இதயத்தின் அடித்தளத்திலிருந்து கிளர்ந்தெழும்
ஒரு உருக்கமான பிரார்த்தனை இறைவனை எட்டுவது திண்ணம் .
‘’அக்கா எனக்கு ஒன்றுபுரியவில்லை கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லும் தஞ்சையிலேயே
வைத்துக்கொள்ள வேண்டியதுதானே ஏன் சென்னைக்கு கொண்டுவந்தாய் சென்னயில்தான் கடவுள் உதவி
செய்வாரா?’’
‘’முட்டாள் மாதிரி பேசாதேகடவுள்
உதவுவார் என்று ஒருவன் படிக்காமலே பரீட்சை
எழுத முடியுமா? அங்கே சில வசதிகள் இருக்காது அப்பல்லோவில் எக்யூப் மெண்ட்ஸ் அதிகம்
கடவுள் உதவினாலும் நம்
முயற்சியும் வேண்டும். பக்தி யோகத்தில் இருப்பவர்களுக்குத்தான் அது புரியும்’’
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்
போது வேணியின் மகன் ரவி ஓடிவந்தான்
என்ன ரவி ஓடி வ்ரே என்னவாயிற்று/’’
’’அம்மா உங்க பிராத்தனைக்கு
கடவுள் செவி சாய்த்திட்டார் அப்பா கண்விழித்திட்டார்
டாக்டர்கள் எல்லாம் உங்கள் தாலி பாக்கியத்தாலேதான் அப்பா உயிர் பிழைத்ததாக
பேசிக்கொள்கிறார்கள்’’
‘’தப்புப்பா உண்மையான பக்திக்கு கடவுள் அடிமை ,,அவர் தன் பக்தையின்
கூக்குரலுக்கு செவி சாய்த்திருக்கிறார் அதுதான்
உண்மை ‘
டாக்டர்களுக்கே சவாலாக
இருந்தது விசுவத்தின் உயிர் அவர்களுக்கு இன்றுவரை வியப்பாகவும் இருக்கிறது விசுவம்
உயிர் பிழைத்தது
‘’’’
‘
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக