குறளோடு கவிபாடு__90
வாழ்க்கை நிலைகள்
வளம்மிக வேண்டின்
ஏற்றிடு அன்பெனும்
பொன்மனம் கொண்டு
மனத்தின் கண்
அன்பு இல்லாதான்
இல்லறம் பாலைவனத்திற்கு
சமம் ஆகுமன்றோ
அன்பிலாதார் உடம்பு
தோல் போர்த்திய
எலும்பு கூடாகும்
வெற்றுடலால் பயனில்லை
வள்ளுவர் சொன்னதந்த
வாழ்க்கை நெறிகளில்
தெள்ளத் தெளிவுடன்
தேறுவோம் நாம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக