குதிரை வேதம்
குதிரையின் கனைப்பு
வேலையில் முனைப்பு
ஓய்வில்லாத் தனிமையே
உழைப்பின் உவமை
கொம்பில்லா உயிரினம்
தெம்பில் குறைவில்லை
வேகமாய் ஓடும்
நின்றேத் தூங்கும்
பாரம் இழுக்கும்
போருக்கும் உதவும்
ஒற்றைப்படக் குளம்பால்
காற்றாய் பறக்கும்
பிடரிச் சடைகள்
சிலிர்த்துப் பறக்கும்
வீசிடும் வாலோ
தோகையாய்ஆடும்
கூட்டமாய் வாழும்
நாட்டியம் ஆடும்
தனித்து இருந்தால்
மனச்சிதைவில் தவிக்கும்
இறைச்சியை உண்ணா
சைவப். பிராணி
காடும் மேடும்
கடந்திடும் எளிதாய்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக