நெஞ்சேயாம் கைவிடல் உண்டோ
---------------------------------------------------------------
இதயம் கவர்ந்து
இணையாய் வந்து
இல்லறம் ஏற்ற
இரவும் பகலும்
இனிமை தந்தவன்
வைகறை பொழுதில்
விடுத்துச் சென்றான்
விழைபொருள் தேடிட
உணர்ச்சிக் கூத்தில்
உள்ளத்தை விரித்து
ஒவ்வொரு கணமும்
துடித்திடும் என்னின்
துன்பம் உணரானோ
என்னுயிர் தலைவன்
என்னை மறந்தானோ
விரைவில் வருவேன்
விசனம் வேண்டாம்
வக்கணையாய் பேசியவன்
இக்கணமென் நிலையறியானோ
கொஞ்சி என்னை
சிதைத்தவன் வஞ்சி
என்னை வதைக்கலாமோ
அவனைப் போல
என்னால் மறத்தல்
கூடுமோ நெஞ்சேசொல்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran
இது ஒரு சிறிய பொதியுறை மருந்து!
நேர்த்தியாகவே இருக்கிறது!
சிறப்பு வாழ்த்துகள் கவிஞரே!
இன்னும் ஓரிரண்டு வரிகள் தந்திருக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக