வியாழன், 16 ஜூன், 2016

தமிழ்க்கவிதைப்பூங்கா கவிதை-17

தமிழ்க்கவிதைபூங்கா கவிதை--17


14=6-2016
காலை வணக்கம்
கவிதை முடிவு இதோ!
14/06/2016.....,

படம் பார்த்து புதுக்கவிதை பொழிவோம்-17

தமிழ்க் கவிதை பூங்கா கவிஞர்களே!!
தினம் ஒரு புதுக்கவிதை படைத்திடுவோம் ...
தேர்வு செய்யப்பட்ட கவிதை இதோ!
********************************
சரஸ்வதி ராஜேந்திரன்
********************************
கண்ணால் காண்பதுபொய்யென்று
கண்ணை கருப்புத்துணியால்
கண்ணை கட்டி நிற்கின்றாய்
வேண்டியவர் வேண்டாதவர்
வேறுபாடு தெரியக்கூடாதென்றுதானே
கண்ணைக்கட்டி நிற்கிறாய் ஆனால்
நீதிதேவதையான உன்னையே நீதிபதிகள் நிதிக்காக ஏமாற்றி
நீதியை சாக அடிப்பது தெரியுமாஉனக்கு?
சட்ட அஸ்திரங்கள் எல்லாம்
லஞ்ச லாவண்யத்தில்
நீத்துப்போகின்றன நிரபராதிகளே தண்டிக்கப்படும் கொடுமை
நிர்ணயமாகிவிட்டது நீயிருந்தும்
கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி
நீதி தேவதையான உன்னையே
குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் கொடுமைதான்!!

வல்லமைபுகைப்படப்போட்டி===67

தோள்மீது
தோழனாக
குரங்கு
 குரங்கின் உழைப்பே
குரங்காட்டியின் பிழைப்பு
குரங்கை விட்டால்
அவனுக்குபிழைப்பில்லை
அவனை விட்டால்
குரங்கிற்கிற்கும் கதியில்லை
அடிக்குப்பயந்தும்
ஆகாரத்திற்காகவும்
அவன்
ஆணைப்படி ஆடும்
அந்தரத்திலும் தொங்கும்
வித்தைகாட்டியின் விரலசைவுக்கு
இன்றைய பெற்றோர்களுமே
வித்தை காட்டிகள்தான்
பிள்ளைகளை
அதைப்படி இதைப்படி
டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு
கோலில்லாமல்
ஆட்டி வைக்கின்றனர்
குரங்கு எப்படி குரங்காட்டியின்
சொல்லுக்கு உடன் படுகிறதோ
அதேபோல் பிள்ளைகளும்
பெற்றோரின் செயலாக
வெளிப்படுமேயன்றி
தானாக எதுவும் செய்வதில்லை
என்பதே தெளிவு
சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்
மக்களையும் குரங்காட்டியாகத்தான்
காட்டுகின்றன இன்றைய
அரசியலுக்கும் இது பொருந்தும்
எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்
எல்லாருமே குரங்காட்டித்தான் – சரஸ்வதி இராசேந்திரன்
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதால் என்னவோ குரங்கின் செயலுடன் மனிதன் செயலை ஒப்பிட்டுக் கூறும் மரபு உள்ளது. மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் செயல், எதிலிலும் நிலையில்லாத மனமுடைய மனிதனுக்கு உவமையாக வந்துள்ளது. மனம் ஒரு குரங்கு என்று கூறும் வழக்கமும் உண்டு. இங்கு குச்சியை எடுத்து குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டியை, பிள்ளையைத் தன் விருப்பத்திற்கேற்ப கோலில்லாமல் ஆட்டிவைக்கும் பெற்றோர்களுக்கு உவமையாக சுட்டிக் காட்டியுள்ளார் கவிஞர். `கோலில்லாமல்’ என்று கூறுவதன் மூலம் பெற்றோர் குறிக்கோளில்லாமல் செயல்படுவதையும் எளிய வரிகளில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ள சரஸ்வதி இராசேந்திரனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு என் பாராட்டுகள்.

புதன், 8 ஜூன், 2016

தமிழ்த்தேர்

தமிழ்த்தேருக்காகஎழுதப்பட்டது
பாராட்டு
தட்டிக்கொடுத்து பாராட்டப்படும் குழந்தை
எட்டாத உயரத்தையும் எட்டிப்பிடிக்கும்
கொட்டுமழைபோல் கொப்பளிக்கும் பாராட்டால்
தொட்டதெல்லாம் எட்டதிறமைக்கு அது ஊக்கமாகும்

அரசன் முதல் அரசியல்வாதிவரை இன்னொருவன்பாராட்ட
அன்று முதல் இன்றுவரை எதிர் பார்க்குமெண்ணம் ஏராளம்
தனக்குள்ளே தானிருக்கும் திறமைக்கு அங்கீகாரம்
மனமாற பாராட்டும் மாண்பு வேண்டும் அனைவருக்கும்
போட்டியிடுவோருக்கும் பந்தயத்தில் ஓடுபவருக்கும்
தேவை பாராட்டு உளமார்ந்த ஊக்கமாகும்
பதற்றப்படுவோருக்கும் பயம் கொள்வோருக்கும்
பாராட்டுதான் மாமருந்து மனித சக்திக்கு உந்து சக்தி
சுற்றி நின்று விசில் அடித்தால் குதிரைக்கும்சக்திவரும்
வெற்றிக்கோட்டை வெகு விரைவாய் எட்டிவிடும்
ஏற்றமுறச்செய்யவே சுற்றி இருப்போரையும்
போற்றிப்பாராட்டும் நல் குணத்தை பெற்றிடு

வல்லமை புகைப்பட போட்டி-66

குடி கார கணவன்
ஒரு புறம்
படிக்கும் பிள்ளைகள்
ஒரு புறம்
வீட்டு வருமானம்
போதாத குறை
ஒருபுறம்
வறுமையை ஓட்ட
வகையாய்தேர்ந்தெடுத்த
வளமான தொழில் இந்த
தொழிலுக்கு
மூலதனம் தேவையில்லை
வேண்டியது உழைப்பே
லட்சியங்கள் எல்லாம்
உயிர்பெறுவது
நடுத்தர வர்க்கத்து
மக்களால்தான்
வீடெல்லாம் பூவாசம்
வறுமைபோக்க
வீட்டு வேலை முடிந்து
பூக்கட்டும் வேலை
தினமும் நூறு ரூபாய்
தினக்கூலி தீர்ந்திடும்
தினப்படி கவலை
ஆனால் பூகட்டும்
பொன்னமாவின் கவலையெல்லாம்
பெண்கள் இன்று
அவிழ்த்த கூந்தலை
முடித்தால்தானே பூவைக்கமுடியும்
பூவைப்பது அநாகரீகமாய்
கருதும் காலமாகிவிட்டது
பூகட்டி வறுமைதீர்த்தகாலமும்
போய் விடும் போலிருக்கிறது
ரிலையன்ஸ் நிறுவனமும்
பூக்களுக்கு வேர்ஹவுஸ்
அமைச்சுட்டால் எங்க பிழைப்பிலே
மண்தான் போங்க (சரஸ்வதிராசேந்திரன்)

பூத் தொழில் புரிவோரின் குடும்பச் சூழலையும் பூத்தொழில் முறையையும் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் அவிழ்த்த கூந்தலை முடிந்தால் தானே பூ வைக்க முடியும் என்று, இன்று பெண்களிடம் குறைந்து வரும் பூச் சூடும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள்(,) கூந்தலில் முல்லை மலர்ச் சரத்திற்கு நடுவில் கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு சென்றது ஒரு காலம். இன்று கனகாம்பரம் என்ற மலரைப் பெண்கள் கூந்தலில் பார்ப்பது அரிதாகிவிட்டது. பூத் தொழிலின் இன்றைய நிலை(,) எதிர்கால நிலைக் குறித்த சிந்தனையையும் எழுப்பி நம் எண்ண அலைகளைக் கீறிவிட்டிருக்கும் சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறோம். கவிஞருக்குப் பாராட்டுகள்