நவீன கவிதை
சற்றுமுன்பு நாம் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்
நிழல் பின்னிக் கிடக்கும்
கதையளந்ததைப் பற்றியா
கல்லூரிக்கால
இளைய பொழுதுகள்
கண்களுக்குள் காதலாய்
நிரம்பி வழிந்ததைப் பற்றியா
நாம் சற்றுமுன்பு
எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்
அறிவுக்கு விருந்தான
ஆயிரம் நூல் கற்றும்
அறியாமை அகலாததைப் பற்றியா
எதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம்
உனக்கும் எனக்கும் நடந்த
திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருதோமா
பூத்துக் காய்த்து
பழம் தந்து ஓய்ந்த நிலையிலும்
காய்ந்த செடியில் ஒட்டிக்கொண்டிருக்கும்
விதையைப் பற்றியா
பிள்ளகளால் விரட்டப்பட்டாலும்
நமக்குள் உள்ள ஆத்மார்த்தமான
காதலைப்பற்றி
நிழல் பின்னிக்கிடக்கும்
வேப்பமரத்தடியில் அமர்ந்து
சற்றுமுன்அதைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக