சனி, 11 மார்ச், 2023

மும்முடி சோழன் முதலாம் ராஜராஜன்

 மும்முடி சோழன் முதலாம் ராஜராஜன்

சுந்தர சோழனுக்கும்
வானமா தேவிக்கும்
சதயத்தில் தோன்றிட்ட
சரித்திர நாயகன்
சோழகுல சுந்தரன்
மும்முடிச் சோழன்
முடி வணங்காவேழம்
நஞ்சையும் புஞ்சையும்
கொஞ்சி விளையாடிய
தஞ்சை வளநாட்டின்
நெஞ்சம் கவர்ந்த
வெஞ்சமர் பலகண்ட
அஞ்சாத வீரன்
வேழம் போன்றவன்
சோழச் சிங்கமவன்
முதன் முதலில்
தென் திசையில்
தன் வெற்றியை
நிலை நாட்டியவன்
காந்தளூர்சாலை கலமறுத்த
வேங்கை சோழன்
கங்கர்களின் கங்கபாடியும்
நுளம்பர்களின் நுள,ப்பாடியையும்
சோழநாட்டுடன் இணைத்தான்
தூதுவனை அவமதித்ததால்
மேதகு மன்னனிவன்
உதகையைத் தீயிட்டுக்
கொளுத்தி பழித்தீர்த்தான்
வெற்றித் திலகமாம்
வீரனிவன் தீரம்
ஈழப் போரில்
வேழமாய் புகுந்து
அனுராதபுரத்தை அழித்துத்
புது நகரை உருவாக்கி
தனிப்பெருமை நாட்டினான்
தரும சாத்திரங்களையும்
முன்னோர் வரலாற்றையும்
செப்பேடுகளில் பொறித்தவன்
அளவிலா கல்வெட்டுகள்
அவன்புகழ் கூறுகிறது
வெற்றிப்பட்டங்களின் சாட்சி
திருவலாங்காடு பட்டயங்கள்
ஆழ்ந்த சிவபக்தன்
ஆதரித்தான் அனைவரது
சமயங்களையும் சமநோக்காய்
உன்னத சிற்பக்கலையின்
சின்னமாய் பெரியகோவில்
இன்னமும் பேர்விளங்க
அழகியசோழன் அருள்மொழிவர்மன்
ராஜமார்த்தாண்டன் ராசேந்திர சிம்மன்
சத்திரியசிகாமணி கீர்த்திபராக்கிரமன்
ஒப்பற்றமன்னனின் புகழ் ஓங்குக
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Admin
Saraswathi Rajendran வெற்றித் திலகமாம் வீரனிவன் தீரம்
ஈழப் போரில் வேழமாய் புகுந்து
அனுராதபுரத்தை அழித்துத்
புது நகரை உருவாக்கி
தனிப்பெருமை நாட்டினான்.
நீண்ட இந்த நெடுங் கவிதையில் இன்னும் கொஞ்சம் பொலன்னறுவை முன்னிறுத்தி சொல்லியிருக்கலாம் என நினைக்கிறன்..
வாழ்த்துகள் கவிஞரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக