புதன், 27 ஜனவரி, 2016

வல்லமை. புகைப்பட போட்டி -47

”யாரோ கொடுத்த அன்பளிப்பாய்க் காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தேன். இங்கே எனக்கு அன்பை அளிக்க எவருமில்லை! பாகனுக்கு உழைப்பதே என் பிழைப்பு; யாரும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு!” என உள்ளம்குமுறும் களிற்றைக் காண்கின்றேன் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.
யாரோ கோவிலுக்கு
கொடுத்த அன்பளிப்பாம் நான்
காட்டைவிட்டு( பிறந்தவீடுவிட்டு)
நாட்டுக்குள் ( புகுந்தவீடுவந்ததும்) பாகனின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தாயிற்று
என் பழக்க வழக்கங்கள் யாவும்
கரும்பையும் மூங்கிலும்தின்றவனுக்கு
கடலையும் பொங்கலும் புளியோதரையும்
சர்க்கரை வியாதியை உண்டாக்க
மருத்துவரின் பரிந்துரைப்படி காலை
ஒரு மைல்தூரம் நடைபயிற்சி பாகனுடன்
போகும் வழியெல்லாம் மக்கள் அணுக
சாமிக்கு சாமரம் வீசிய கையால்(தும்பிக்கையால்)
யாசகம் கேட்க வைத்தான் பாகன்
மக்கள் கொடுக்கும் இலவசம்
உணவென்றால் எனக்கு
பணமென்றால் பாகனுக்கு என
புரிந்துணர்வு ஒப்பந்தம் இருவருக்குள்

[…]
வேட்டையாடிய யானையாகி பாகன் கையில்
வித்தை காட்டும் பொருளாகி வாழ்கிறேன்
என்னை விட மனிதனுக்கு சக்தி அதிகம்தான்
தன்னைப்போலவே என்னை மாற்றியுள்ளானே?
வருடம் ஒரு முறைபிறந்த வீடு அனுப்புவார்கள
ஆட்சியாளரின் அறிவுறைப்படி அதிகாரிகள்
அது ஒன்றே எனக்கு ஆறுதல்தரும் விஷயம்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான்
எல்லா சவுக்கியமும்…….என்பதே நியதி

நிலா முற்றம் 23-1-2016

நிலா முற்றம்
ஒன்ற இரண்டா
எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை
வார்த்தையில்
வடித்து சொல்ல
கரு ஒன்று உண்டானால்
மறு உருவாய் மாறிடுவர்
கண்ணும் கருத்துமாய்
இமைபோல் காப்பார்
எண்ணும் எழுத்தும்
பயில்விப்பார்
அன்பால் அரவணைப்பதிலும்
அறிவாய் வழிபடுத்தலிலும்
அவருக்கு நிகர் அவரே
கண்டிப்பும் கறாரும் காட்டினாலும்
தண்டிப்பு என்பதே இல்லை
பெற்றோர் கோர்ட்டில்
பிள்ளைகள் முரண் பட்டாலும்
பெற்றோர் முரண்படுவதில்லை
பிள்ளைகள் பாசத்தில்
காக்கைக்கு தன் குஞ்சு
பொன்குஞ்சு என்பதுபோல்
ஆக்கைக்குப் போகும் வரை
அழிவதேயில்லைபெற்றோர் பாசம்
பெற்றொர் பாசத்திற்கு முன்
மற்றவர்கள் பாசம் வெறும் தூசு என்பதை
பிள்ளைகள் உணரும் வரை
பேதமில்லை முதியோர் இல்லமில்லை நாட்டில்

நிலா முற்றம்-25-1-2016

நிலா முற்றம்
ஒன்ற இரண்டா
எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை
வார்த்தையில்
வடித்து சொல்ல
கரு ஒன்று உண்டானால்
மறு உருவாய் மாறிடுவர்
கண்ணும் கருத்துமாய்
இமைபோல் காப்பார்
எண்ணும் எழுத்தும்
பயில்விப்பார்
அன்பால் அரவணைப்பதிலும்
அறிவாய் வழிபடுத்தலிலும்
அவருக்கு நிகர் அவரே
கண்டிப்பும் கறாரும் காட்டினாலும்
தண்டிப்பு என்பதே இல்லை
பெற்றோர் கோர்ட்டில்
பிள்ளைகள் முரண் பட்டாலும்
பெற்றோர் முரண்படுவதில்லை
பிள்ளைகள் பாசத்தில்
காக்கைக்கு தன் குஞ்சு
பொன்குஞ்சு என்பதுபோல்
ஆக்கைக்குப் போகும் வரை
அழிவதேயில்லைபெற்றோர் பாசம்
பெற்றொர் பாசத்திற்கு முன்
மற்றவர்கள் பாசம் வெறும் தூசு என்பதை
பிள்ளைகள் உணரும் வரை
பேதமில்லை முதியோர் இல்லமில்லை நாட்டில்

நிலா முற்றம்- 26-1-2016

வணக்கம் கவி உறவுகளே
நேற்றைய தலைப்பில் கவியெழுதி வெள்ளி முத்திரைப் பெறுகிறார் கவிதாயினி Saraswathi Rajendran
அவருக்கு நம் வாழ்த்துகள்
பசுமை
பசுமை பயிரோட்டம் ஒன்றே
பாரதத்தின் உயிரோட்டம் அன்று
காவிரித்தாய் ஓடும்தமிழ் நாட்டில்
கண்டதெல்லாம் பசுமை காட்சி
பூவிரித்து புகழ்விரித்த பசுமை ஆட்சி
பொன் விரித்த நெல்மணிகள் சாட்சி
நெல் விளைந்ததஞ்சை தரணியிலே
கல் முளைத்த கட்டிடஅணிகளே இன்று
தெருவோரம் இருந்திட்ட மரங்கள்
சருகாய் போய்விட்ட சோகங்கள்
சிறுமைகள் ஆடும் ஞாலத்தில் பசுமை
அருமையை உணர்ந்திட ஆளில்லை
வரும் இளைய தலைமுறைகளே!
ஒரு மனதோடு பசுமை புரட்சிசெய்து
பாரதத்தை பசுமையாய் ஆக்குங்கள்
சரஸ்வதி ராஜேந்திரன்
Muthupet Maran's photo.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

தடாகம் டிசம்பர் மாதபோட்டி

                 தடாகம்

செழுங்கவிகள்    பூக்கின்ற      தடாகம்  இது
செந்தமிழ்        மணக்கின்ற    கூடாரம்
பணத்தவர்       இனத்தவர்     பார்ப்பதில்லை
குறைகள்         எவரும்       சொன்னதில்லை
நிறைகள்         ஒன்றால்      பரிமளிப்பு
வளமான         கவிதைகள்      படைத்திட
தளமாய்         துணை நிற்கும்  தடாகம்
புலமைக்கு       மதிப்பளிக்கும்  பாங்கு கண்டு
களமிறங்கி       வருகிறார்     கவிஞரெல்லாம்
இனிய தமிழ்     காக்கின்ற    தடாகத்தொண்டு
என்றும்எவரும்   போற்றும்    அருந்தொண்டு
கவிஞர்கள்      படைப்புகள்   யாவும் அழகு
கவியருவி    கவிதீபம்விருதுகள் வழங்கிடல்சிறப்பு   
இணையே     இல்லாத     இலக்கிய வட்டம்
துணையே     கவிஞரின்    கவி ஊற்றுகள்
போற்றிப்      பாடுவோம்      நாமே இந்த
தடாகப்       பெருமைகளைத்   தானே

சரஸ்வதி ராசேந்திரன்  புனை பெயர்-மன்னை சதிரா
51 வடக்குரத வீதி

வல்லமை புகைப்பட போட்டி--46

கள்ளமற்ற வெள்ளை உள்ளம் பிள்ளைகளுடையது. அவர்களால் மட்டுமே சிறிய விஷயங்களில்கூடப் பெரிய இன்பத்தைக் காணமுடிகின்றது. தம் மனத்தைத் துயரின்றிப் பேணமுடிகின்றது. இந்தக்கலையை பெரியவர்களும் கற்றால் ’பேராசை’ எனும் வார்த்தையே வையத்தில் வழக்கொழிந்து போகுமே!
”இதோ ஒரு சிறுவன் உடைந்த ஆசனத்தையும் அரியாசனமாய் எண்ணி ஆடுகின்றான்! முகத்தில் மகிழ்ச்சியோ கரைபுரண்டு ஓடுகின்றது. அவன் ஊசலை உந்தி முன்னேறுவது போலவே நாமும் வாழ்வில் உந்துதலோடு முயன்றால் அனைவரையும் முந்தலாம் என்கிறது ஒரு கவிதை; தருகிறது மனத் தெளிவை!
போகி யால்
யாரோ போக்கிய
உடைந்த ஊஞ்சல்
பழைய இரும்பு
எடுப்பவனிடம் சிக்கப்
பழசானாலும்
புதிதாய்த் தெரிந்தது
அவன் மகனுக்கு
அடுத்த நாளே அதை
அரசு கட்டிலாக்கி
அரியணனை ஏறினான்
ஆனந்தமாய் வீசிவீசிஆட
தூசியாய் தெரிந்தது துயரம்
மகனின் உல்லாசம்
பெற்றவனையும்
தொற்றிக்கொண்டது
சுடுபட்ட வாழ்க்கை
விடு பட்டதுபோல்
ஊஞ்சல் ஆட்டம்
உல்லாசமானதுதான்
சிதறிக்கிடக்கும்
சீர் கெட்டவாழ்க்கை
உதறி உந்தி உந்தி ஆடி
உவகை அடைந்தான்
கிடைப்பதைக் கொண்டு
திருப்திப்படும் வாழ்க்கை
புரிந்து சகித்து
பொருந்தியே வாழும்
பாடம் எல்லோருக்கும்
பொருந்தும்தானே!

’கிடைப்பதில் நிறைவாய் வாழ்வதே வாழ்க்கை’ என்று முத்தாய்ப்பாய்த் தன் கவிதையை முடித்திருக்கும்  திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

வல்லமை புகைப்பட போட்டி==45

’சிறுவர்காள்! துள்ளிவிளையாடும் பிள்ளைப்பருவ விளையாட்டுக்கள் உள்ளம் தொடுபவைதாம்! ஆயினும் இவற்றோடு நின்றுவிடாது எதிர்கால வாழ்வையும் சீராய்த் திட்டமிடுங்கள்! சிகரம் தொடுங்கள்! என்று இன்னுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.---mekala ramamouty
உண்மை உணர்க !
உருண்டு திரண்டு
உழன்று சுழன்று
மண்ணில் இருந்து
விண்ணில் பறக்க
முயன்று பார்ப்பது
பள்ளிசெல்லும் வயதில்
துள்ளிப் பறப்பதும்
இயல்புதான் இது
விளையாட்டுதான் !
ஆனால் வாழ்க்கையில்
கெட்ட வழியில்
சொத்து சேர்த்து உயராமல் நல்
முத்தாய் பெயர் பெற
நயம்பட உழைத்தும்
சுயமாய் நேர்பட நின்றும்
உயரம் ஏறி
சிகரம் தொட்டு
உயரும் நிலைதான்
பிறப்பின் சிறப்பே
எந்த நிலையிலும்
உயர உயரப் பறந்தாலும்
ஓர் நாள் பறவை கீழிறங்கும்
உண்மைதனை உணர்க பிள்ளைகளே