வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா

Like This Page · May 6Edited 
 
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 28/04/2017நடந்து முடிந்த
பாரதிதாசன் தலைப்பு பாவேந்தர் வாழியவே
எனும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்க களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்கள்:
கவிஞர் கவிஞர் கோவிந்தராஜன் பாலு
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்

பாவேந்தர் வாழியவே

புதுவையின் புரட்சிப்பிறப்பே
பாரதியிடம் பற்றுகொண்டு
பாரதி தாசன் என்று பெயர் சூட்டிக்கொண்ட பாவேந்தர் வாழியவே

திறம் பட பாடவந்த கவிஞன் புதிய
அறம்பாட வந்த அறிஞன் அவன்
அனுபவப்பாடலோடு நகைச்சுவையும் கலந்துதரும்
உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிக்கவிஞன்

புதியதோர் உலகம்செய்வோம்கெட்ட
போரிடும் உலகத்தைவேரோடுசாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்றுபெயர் அந்த தமிழின்பத்
தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாடல் தந்த பாவேந்தர் வாழியவே

பெரியாரின் தீவித்தொண்டராகி
திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு
கடவுள் மறுப்பு சாதி மறுப்பு மத எதிர்ப்புகளை
கவிதைமூலம் பதிவு செய்த புரட்சிக்கவிஞன்

தமிழ் ஒரு அழகிய பூக்காடு என்றும்
தன்னை வட்டமிடும் தும்பியாக உருவகப்படுத்தியவர்
தமிழை தன் உயிரோடு இணைத்துப் பாடிய
பாவேந்தர் வாழியவே

சரஸ்வதி ராசேந்திரன்

கவியுலப்பூஞ்சோலை

குறிஞ்சியாய் பூத்திடும் உன் பதிலுக்காய்
கூடை நிரம்பிய மல்லிகையாய் என்
கேள்விகளோ பல நூறு..........
குறை தீர்க்கும் வார்த்தை தேடிடும் என்
கோரிக்கையோ ஒன்றே ஒன்று......,
கொஞ்சு தமிழ் எடுத்து அதில் கூட்டி காதல் குழைத்து
பிஞ்சு முகம் பார்த்து நெஞ்சு நெகிழ பேசியது மறந்தனையோ
காற்றாகி வந்த புயல் காலனென மாறலாமோ
நேற்றாகிப் போன கதை நீ மறந்து போனதுவோ
ஊற்றாகி வந்து உதிர்ப்பாய் உன் நல் பதிலை
கடைக்கண் பார்வையிலும்
கண நேரப் பேச்சிலும்
என்மனதை அடகு வைத்து
வலம் வந்து நின்றேன் நீ
நலம் தருவாய் என்று
குறிஞ்சியாய் பூத்துவிடு நெருஞ்சியாய் மாறாமல்
என் சோகத்தை எல்லாம்
வார்த்தைகளில் சேர்த்து கோர்த்துவிட்டேன்
வேர்த்திடும் என்னை வியத்திட வைப்பாய்
கோரிக்கையுடன் நிற்கிறேன் வேரில் பழுத்த பலாவாய்
குறை தீர்க்கும்
வார்த்தையால் என்னை குளிரவை பாலாய்

ஊ.....ல......ழ.......ள குழுமம்


நடந்து முடிந்த "நட்சத்திர கவிதைகள்" குறுங்கவிதைப்போட்டியில் " இதயத்தை எரிக்காதே" என்ற தலைப்பில் தேர்வு பெற்ற வெற்றியாளர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது...
.
வெற்றிபெற்ற அனைவருக்கும் 100 வது நாள் கடந்த ஊ...ல...ழ...ள...வின் இனிய நல் வாழ்த்துக்கள்.
.
இவண்
ஊ...ல...ழ...ள. நிர்வாகக்குழு.

நிலாச்சோறு


பாவலர் Saraswathi Rajendran அவர்கள்
வாழ்த்துகள்
இவண்
நிலாச்சோறு குழுமம்

கவியருவி

'உழைப்புத் தருமே மதிப்பு'.. புதுக்கவிதை
வெற்றியாளர்: கவிஞர்
சரஸ்வதி ராஜேந்திரன்
உழைப்புத் தருமே மதிப்பு
உழைப்புத் தருமே மதிப்பு
உணர்ந்தவருக்கே அது தரும் களிப்பு
உழையாதவன் படுவான் பெருமிழப்பு
உழைப்பே பிறப்பின் சிறப்பு
பலன் பெற வாழ்வோம் உழைத்து
பிழையற்று வாழ்வோம் பிழைத்து
உழைத்துப் பிழைப்பவன் உயர்வான்
பிழைக்கும் பிழைப்பில் நிமிர்வான்
உழைக்கும் உழைப்பே வரலாறாகும்அது
பிழையிலா பேரின்ப நல் பேறாகும்
வாழ் நாள் முழுதும் உழைத்தாலே
பாழ்படும் நிலைமை வாராதே
வாழும் வாழ்க்கை வளமாக வேண்டின்
தாழ்வுமனம் கொள்ளாது உழைத்திடுக
மானமிகு வாழ்க்கை உழைப்பில் உள்ளது
ஏனைய துன்பம் அதில் என்றும் இல்லை
அழகிற்கு அழகாம் அமைதி வாழ்க்கை
அழியாமல் காக்க உழைத்து வாழ்
உழைப்பே வாழ்வின் உறுதுணையாம்
உயர்ந்த எண்ணம் உளம் கொள்க
உண்மை உழைப்பை உறுதியாய் கொள்
ஊதாரித்தனத்தை உதறியே தள்
உழைப்புத் தருமே மதிப்பு
வழிவழிவாரிசுக்கு தந்திடு இந்த பதிப்பு
சரஸ்வதிராசேந்திரன்

தமிழமுதுகவிச்சாரல்

தமிழமுது_கவிச்சாரல் குறுங்கவி_போட்டி
இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
"""""""""""""""""""""""""""""""""""""""
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நாளைய 7--5--17 நாளாம் குறுங்கவி_போட்டி
தங்களது #படத்திற்கேற்ற குறுங்கவியை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள், வெற்றிக் கவிதைக்கான சிறப்பான சான்றிதழ் முகநூலில் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்படும்

#சரியாக_இருபத்தி_நான்கு 24 சொற்களில் படத்திற்கேற்ற குறுங்கவி படைக்கவும்

போட்டி விதிமுறைகள்
#####################
1. #சரியாக_இருபத்தி_நான்கு 24 சொற்களில் குறுங்கவி படைக்கவும்
2.சான்றிதழில் பதிவதற்கான #நிழல்_படம் இங்கு இணைக்கவும்...உங்கள் விருப்பம்....படம் இல்லாவிட்டால் கவிதை தேர்வாகாது
3.#பேச்சுவழக்கு_சொல்_கவிதையில்பயன்படுத்த_வேண்டாம்.நிபந்தனைகளுக்கு ஏற்ப அமையாத கவிதைகள் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
4..#எழுத்துப்பிழைகள்# இல்லாமல் #ஆங்கில_சொற்களைத்_தவிர்த்தல் மிக அவசியம்.
5.ஒரு போட்டியில் 15 சான்றிதல்கள் மட்டுமே வழங்கப்படும்
6. எழுத்துப்பிழை இல்லா கவிதைகளுக்கு சான்றிதழ் படும் வெளியாகும்...பிழை இருப்பின் சான்றிதழ் கிடைக்கப்பெறாது அதனால் எழுத்துப்பிழைகளில் கவனம் செலுத்தவும்
7.கவிதைப் போட்டி மாலை_6.00_மணியுடன் 7--5--17 முடிவுறும்
8.சொற்கள் கூடினாலும் குறைந்தாலும் கவிதை தேர்வாகாது கவனத்தில் சரியாக 24 சொற்களில் கவிதைப் படைக்கவும்
பூசு மஞ்சள் நிறத்தவளே
வீசுகிறாய் கண் வலையே
உன் சிறகு விரித்த கூந்தலில்
என் சிறிய இதயம் நீந்துதே
கன்னியிளம் பூங்குயிலே
உன்னைக் கண்டதும்
தண்ணீரிலுள்ள மீன்கள்
தானாக கூடை சேர்ந்ததோ
என்னைப்போல

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 28/04/2017நடந்து முடிந்த
பாரதிதாசன் தலைப்பு பாவேந்தர் வாழியவே
எனும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்க களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்கள்:
கவிஞர் கவிஞர் கோவிந்தராஜன் பாலு
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
பாவேந்தர் வாழியவே
புதுவையின் புரட்சிப்பிறப்பே
பாரதியிடம் பற்றுகொண்டு
பாரதி தாசன் என்று பெயர் சூட்டிக்கொண்ட பாவேந்தர் வாழியவே
திறம் பட பாடவந்த கவிஞன் புதிய
அறம்பாட வந்த அறிஞன் அவன்
அனுபவப்பாடலோடு நகைச்சுவையும் கலந்துதரும்
உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிக்கவிஞன்
புதியதோர் உலகம்செய்வோம்கெட்ட
போரிடும் உலகத்தைவேரோடுசாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்றுபெயர் அந்த தமிழின்பத்
தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாடல் தந்த பாவேந்தர் வாழியவே
பெரியாரின் தீவித்தொண்டராகி
திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு
கடவுள் மறுப்பு சாதி மறுப்பு மத எதிர்ப்புகளை
கவிதைமூலம் பதிவு செய்த புரட்சிக்கவிஞன்
தமிழ் ஒரு அழகிய பூக்காடு என்றும்
தன்னை வட்டமிடும் தும்பியாக உருவகப்படுத்தியவர்
தமிழை தன் உயிரோடு இணைத்துப் பாடிய
பாவேந்தர் வாழியவே
சரஸ்வதி ராசேந்திரன்

கவிதை

ஆதாம் ஏவாள் பாடமும்
புத்தனின் ஞானமும்
புத்தியில் ஏறவில்லை
அலைபோல் ஆசைகள்
நிலை தடுமாறவைக்கும்
நிம்மதி இழக்கும்
முறை தவறிபோகும்
தறி கெட்டு ஓடும்
கறை படிந்து நிற்கும்
அளவற்றுப் போனால்
களமற்றுப் போகும்
களங்கம் சேரும்
குணம் கெட்டுப்போகும்
மனம் அமைதி இழக்கும்
தினமும் அல்லல்தான்
கொள்ளை ஆசை கொண்டாலே
கூண்டோடு குடும்பத்தை
குழியிலே தள்ளும்
எளிமைமிகு வாழ்க்கை
ஏற்றமுறச்செய்யும்
எழிலுடன் விளங்கும்
பொல்லாத ஆசைகளால்
பொல்லாங்குதான் மிஞ்சும்
நில்லாது அழியும் வாழ்க்கை
உள்ளத்தின் ஆசைகளை
உதறிய பின்னே
நிலைத்திடக்காண்பாய் அருள்
அழிவதற்கா நாம் பிறந்தோம்
ஆறறிவும் பெற்றோம்
ஆசை அறுத்து வாசமாய் வாழ்வோம்

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..மனதினிய முதற்கண் 
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமத்தில் 27/04/2017 நடந்து முடிந்த
படம் பார்த்துக்
கவிதை எழுதும் போட்டியில், கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் ஹிம்சானா
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
படக்கவிதை சிறப்புச் சான்றிதழ் போட்டி
உடலால் உயிரினம் வேறுபடும்
உள்ளத்தால் அவை ஒன்றுபடும்
இயற்கை அழகின் தனிப்பிறவி
இனிமை தரும் தனி வரவே
கூண்டுச் சிறைக்குள் என்னைப்போல்
குறைபட்டு கிடக்க விடமாட்டேன்
சிறையிருக்கும் உணர்வு வலியை
சிந்தையில் நானும் உணர்ந்ததால்
திறந்து விடுகிறேன் கூண்டை
பறந்து போங்கள் நீங்கள் இந்த
பாவைக்கும் சுதந்திரம்வேண்டி
தங்கு தடை இனி இல்லை
தேசம் முழுதும் உங்கள் எல்லை
சரஸ்வதிராேந்திரன்

ஹைக்கூ

இயற்கை மரணிக்க
ஆவணத்தில் கையொப்பம் இடப்பட்டது
சிசேரியன்
முனைவர் ம.ரமேஷ் அவர்களால் இந்த ஹைக்கூ M.Philஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுதுளிர் விடுகிறது
பஞ்சாயத்து ராஜ்ஜிய விழிப்புணர்வு
மதுக்கடைமூடல்
LikeCommentShare
6 முனைவர் ம.ரமேஷ் and 5 others
Comments
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ் M.Philஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..மனதினிய முதற்கண் 
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமத்தில் 25/04/2017 நடந்து முடிந்த எழுதிச் செல்லும் விதியின்கையில் எனும் பாரதிதாசன்
கவிதை எழுதும் போட்டியில், கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் மதுரா
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
பாரதிதாசன் சான்றிதழ் போட்டி
எழுதிச்செல்லும் விதியின்கைகளில்
நழுவிப் போகும் மனித வாழ்க்கை
ஜனனம் என்பது ஒரே மாதிரிதான்
மரணம் என்பது பல வழிகளில் நிகழும்
வாழ்க்கை என்பது ஒரு முறைதான் அதை
வாழ்ந்து தீர்ப்பதே மனித நடைமுறை
விதியை எண்ணிக் கலங்காதே
வீணில் கவலை கொள்ளாதே
அறுந்த பட்டம் வானில் அலைக்கழிவதுபோல்
உடைந்த பாய்மரம்கடலில் சிக்குண்டதுபோல்
சூறைக்காற்றில் காகிதம் சிக்கியதுபோல் வெல்லும் நோக்கமின்றி வீணில் கிடப்பது முறையாமோ ?
சோதனை வேதனை வென்றுவிடு
சாதனை படைக்க எழுந்து விடு
விதிப்படி நின்று விளைந்ததைக்கொண்டு
மதிபடி வாழத்தொடங்கி விடு
கைக்குள் அடங்கா காரியம் எண்ணி
கவலைகொள்வதில்அர்த்தமில்லை
வருவது வரட்டும் எழுந்து விடு
வரும்வரை வாழ்க்கையை வாழ்ந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்

தமிழமுதுகவிச்சாரல்


#நியாயங்கள்_சவக்குழியில்_படுத்துறங்குகின்றன

தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

தமிழமுதுகவிச்சாரல்#கனவுகள்_பிரசவிக்கும்_காட்சிகளை!

தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்