வெள்ளி, 10 மார்ச், 2023

தொண்டரடிப் பொடியாழ்வார்

 தொண்டரடிப் பொடியாழ்வார்

*************************************
திருமண்டங் குடியூரில்
திருமாலை தினம்வணங்கும்
அந்தணர் குலத்தில்
அவதரித்தார் விப்ரநாராயணர்
எனும் வித்தகர்
அரங்கனை பாடுவதையே
அவதரித்ததன் பயனென
அடியாருக்கு அடியனாய்
அரங்கனின் வழிபாட்டில்
அதிக நாட்டமுற்றார்
சிலகாலம் சித்தம்
தெளியா சில்லறையாக
முறைதவறிய தவறுநடை
போட்டாலும் பக்குவம்
அரங்கனின் அருட்பால்
பருகியதால் பெரும்பாடின்றி
இறைநெறிக்குத் திரும்பினார்
அரங்கனின் அருளுக்கு
ஆட்பட்டு சேவைசெய்து
நந்தவனம் ஏற்படுத்தி
புட்பகைங்கர்யம். எனும்
சேவை செய்தார்
அரங்கனின் தொண்டரின்
திருவடித் துகள்களை
தலையிலிட்டுக் கொண்டதால்
தொண்டரடிப் பொடி எனும்
பெயர் பெற்றார்
நாவாரப் பாடிய
திவ்யபிரபந்தம் இரண்டு
அர்ச்சவ தாரத்தில்
அரங்கனைத் துயில்
எழுப்பும் பத்துரைத்தான் திருப்பள்ளியெழுச்சியும்
நாற்பத்தைந்து பாடல்கள்
கொண்ட பிரபந்தமும்பிரபலம்
தெய்வ தவசீலர்
தந்ததன் நூலனைத்தும்
தெய்வீகம் போற்றும்
தத்துவங்கள் ஆகும்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran
எளிய நடையில் அழகிய கவிதை அரங்கனுக்கு உவப்பே!
'சிலகாலம் சித்தம் தெளியா சில்லறையாக ' கிராமியம் மணக்கிறது!
புஷ்ப கைங்கர்யம் -
வடமொழி எழுத்துகள் தவிர்க்கலாம்!
மற்றபடி கவிதை சிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே!
May be an image of 3 people and text that says 'இலக்கியப் பிருந்தாவனம் தொண்டரடிப்பொடியாழ்வார் தள் தொண்டரடிப்பொடிஆழவார் የO 16.2.2022- 25.2.2022 சிறப்பு வெற்றியாளர் கவி கவிஞர் ஞர் சரஸ்வதி ராசேந்திரன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக