இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக என்னைத்தேர்ந்தெடுத்த வல்லமைக்குகுழுவினருக்கும் மேகலாராமமுர்த்திக்கும் நன்றி நன்றி
நாம் வாழும் உலகு அறத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? அல்லது…பணத்தைச்
சார்ந்து இயங்குகின்றதா? என்றொரு பட்டிமண்டபம் வைத்தால் பணத்தின் பக்கமே
நீதிபதி சாயவேண்டியிருக்கும். காரணம்… ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’
என்று பொய்யாமொழிப் புலவரே விளம்பிவிட்டாரே! அறச்செயல்கள்
செய்வதற்குக்கூடப் பொருளின் துணையைத் தேடவேண்டியிருக்கின்றதே!
’குபேர பொம்மையை விற்றே குபேரனானவர்கள் உண்டு
; ஆயினும் உண்மைப் புதையல்களை உழைப்பால் கண்டடைவீர்!’ என்று எளிய சொற்களில் எதார்த்தம் பேசும் இனிய கவிதை ஒன்று என் இதயம் கவர்ந்தது.--மேகலா ராமமூர்த்தி
அக்கவிதை…
உலகம் முழுதும்
உயிர்ப்பொருள் தெய்வம்
பணம் பணமே !
குபேரன் பொம்மைகண்டால்
குஷிகளில் உள்ளம்
குழந்தையாய் துள்ளும்
கீரிப்பிள்ளை
வீட்டிற்குள் வந்தால் கூட
குபேரன் வருவதாக
குறி சொல்லும்
அறியா மக்கள்
குறுக்கு வழியில்
குபேரன் ஆகத்தான்
குவலயமே விரும்புகிறது
குபேரன் பொம்மையை விற்றே
குபேரனானார்கள் பலர்
உண்மைப் புதையல்கள்
உழைப்பால்தான் வரும்
நம்புங்கள் குபேரனை
நம்பி உழையுங்கள்
உவகையுடன் வந்திடுவான்
குபேரனும்!
இந்தக் கவிதையை யாத்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை
இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். பாராட்டுக்கள்
கவிஞரே!